2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

விவசாய அமைச்சரின் முன்னாள் மனைவியை இன்று மணக்கிறார் மஹிந்தானந்த

Menaka Mookandi   / 2017 ஏப்ரல் 28 , மு.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, இன்று மீண்டும் திருமண பந்தத்தில் இணைகிறார்.

முன்னாள் பிரதமர் டீ.எம்.ஜயரத்னவின் மகளான சேனானி ஜயரத்னவையே, அவர் திருமணம் செய்கிறார்.

ராஜகிரியவில் அமைந்துள்ள அளுத்கமகேவின் இல்லத்திலேயே, இந்த திருமண நிகழ்வு இடம்பெறவுள்ளதாகவும் இதில், குடும்பத்தவர்கள் மாத்திரமே கலந்துகொள்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், இன்று இரவு, அரசியலில் நெருங்கிய வட்டாரங்களுக்கு மாத்திரம், மஹிந்தானந்த அளுத்கமகேவினால் விருந்துபசாரமொன்று வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போதைய விவசாயத்துறை அமைச்சரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளருமான துமிந்த திஸாநாயக்கவின் முன்னாள் மனைவியையே, மஹிந்தானந்த இன்று கரம் சேர்க்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .