2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சடலத்தை பொறுப்பேற்குமாறு கோரிக்கை

Kogilavani   / 2017 ஏப்ரல் 28 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவன்ச

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கிப் பயணித்த தபால் ரயிலிலிருந்து மீட்கப்பட்டவரின் சடலத்தை பொறுப்பேற்க, இதுவரை ஒருவரும் முன்வரவில்லை என பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு கோட்டையிலிருந்து கடந்த வியாழக்கிழமை இரவு  பதுளை நோக்கி பயணித்த தபால் ரயிலிலிருந்து ஆணொருவரின் சடலத்தை, பதுளை புகையிரத நிலைய அதிகாரிகள், கடந்த வெள்ளிக்கிழமை  காலை  மீட்டுஇ பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

ரயிலில் பயணித்த டீ.ஏ.கித்சிறி என்பவரே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பதுளை ரயில் நிலையத்தில் தரித்து நின்ற புகையிரதத்தை சோதனை செய்த ரயில் நிலைய அதிகாரிகள்இ அதில் மேற்படி பயணி மட்டும் வீழ்ந்துக்கிடப்பதை கண்டுள்ளதுடன் அவரை மீட்டு உடனடியாக வைத்தியசாலையில் சேர்த்தனர்.

எனினும்இ அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தனர்.

இவர் நோயொன்றுக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்ததற்கான மருத்துவ அட்டையை ரயில்வே திணைக்கள அதிகாரிகள் கண்டெடுத்து, பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

எனினும் குறித்த மருத்துவ அட்டையில், உயிரிழந்தவரின் விலாசம் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை என்றும் எனவே, சடலம் பதுளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

எனவே, இவர் தொடர்பில் அறிந்தவர்கள்  055 2222222, 055 2222226 தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பு ஏற்படுத்துமாறும் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .