2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

பழைய பொருட்கள் களஞ்சியப்படுத்தும் இடத்தில் தீ

Thipaan   / 2017 ஏப்ரல் 28 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிகரம் பிரதேசத்திலுள்ள காணியொன்றில் வாகனங்களின் பழைய உதிரிப்பாகங்கள் மற்றும் பழைய பொருட்கள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த இடம் நேற்று (27) மாலை தீப்பிடித்து எரிந்ததில், அங்கிருந்த பழைய பொருட்கள் எரிந்து சேதமடைந்துள்ளன என்று, காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.

மாலை 5.30 மணியளவில் இவ்விடத்தில் தீப்பிடித்துள்ளது. இதனையடுத்து, அங்கு விரைந்த பொலிஸார் மற்றும் சிகரம் கிராம பொதுமக்கள் தீயை அணைத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

 இது தொடர்பாக விசாரணைகளை நடாத்தி வருவதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X