2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மட்டக்களப்பில் மரமுந்திரிக்கு கிராக்கி

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 29 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு மாவட்டத்தில் வரலாற்றில் என்றுமில்லாதவாறு மரமுந்திரிகைப் பழங்களுக்கு பெரும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.

மரமுந்திரிகை அறுவடை ஆரம்பித்துள்ள நிலையில், மிகவும் அதிக விலைக்கு மரமுந்திரிகைப் பழங்கள் விற்பனையாகின்றன.

சாதரணமாக இரண்டு ரூபாய் முதல் மூன்று ரூபாய் வரை விற்பனையான ஒரு பழம், தற்போது 10 ரூபாயாக விற்பனையாகின்றது. 10 பழங்களைக்கொண்ட ஒரு பேக் மரமுந்திரிகைப் பழம் 100 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

மட்டக்களப்பு - கல்முனை நெடுஞ்சாலையில் புதுக்குடியிருப்பு -கிரான்குளம் உட்பட பல இடங்களில் பிரதான வீதிகளிலும் பொதுச்சந்தைகளிலும் மரமுந்திரிகைப் பழங்கள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டுவருகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .