2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சைட்டம் விவகாரம்: 24 மணிநேர முஸ்தீபு

Gavitha   / 2017 ஏப்ரல் 29 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாலபேயிலுள்ள தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பான முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லையாயின், எதிர்வரும் மே மாதம் 3ஆம் திகதி முதல் 5ஆம் திகதிக்குள், 24 மணிநேர தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், நேற்று (28) எச்சரித்தது.

சங்கத்தின் மத்திய குழுவின், ஒருமனதான அங்கிகாரம் கிடைக்கப்பெறாமலேயே, இந்த அறிவிப்பு விடுக்கப்படுகின்றது என்று, சங்கத்தின் செயலாளர் நலிந்த ஹேராத் தெரிவித்துள்ளார்.

'இந்தத் தொழிற்சங்க நடவடிக்கையின் போது, ஆசிரியர்கள், போக்குவரத்து பிரிவு, ரயில்வே பிரிவு போன்ற பல்வேறு துறையினர் கைகோர்க்கவுள்ளனர். இந்த நடவடிக்கையின் போது, நாட்டின் பிரதான துறைகள் தொழிற்படாததால், இந்த நடவடிக்கை நாட்டுக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும். மக்களை சிரமப்படுத்துவதற்கு நாம் தயாராக இல்லை' என்று அவர் கூறியுள்ளார்.

தங்களால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு அரசாங்கம் சரியான பதிலை தரவில்லை என்றால், மே மாதம் 9ஆம் திகதிக்கு பின்னரும், இந்த தொழிற்சங்க நடவடிக்கை தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட பல்வேறு கலந்துரையாடல்கள்  தோல்வியில் முடிந்தமையால், ஜனாதிபதியுடனோ அல்லது வேறு எவருடனோ கலந்துரையாடல்களை நடத்துவதற்கு, தயாராக இல்லை என்றும் அவர் மேலும் கூறினார்.

'சைட்டம், தேசியமயமாக்கப்படவேண்டும். அது மாத்திரமே, இதற்கானத் தீர்வாகும். அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட முடிவுக்கு, வைத்தியர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு விருப்பம் இல்லை' என்று அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .