சித்திரை புத்தாண்டு பலன்கள் - 2011
11-04-2011 05:35 PM
Comments - 0       Views - 6524

 

சித்திரை புத்தாண்டு பலன்கள் - 2011


அஸ்வினி, பரணி, கிருத்திகை – 1ஆம் பாதம் ஆக 9- பாதம்.

குரு 12-ஆம் இடத்தில் இருப்பது சிறந்தது இல்லை. எந்த வேலை செய்தாலும் தடைகளும் புதிய கடன்களும் ஏற்படும். சொத்து விடயத்தில் பிரச்சினை ஏற்படும். 09.05.2011இல் குரு 1ஆம் இடத்தில் இருப்பது உகந்த இடமில்லை. பூர்வீக சொத்து விடயத்தில் காவல் நிலையத்திற்கு செல்ல வேண்டியிருக்கும். கூட்டு வியாபாரத்தில் பிரிவு ஏற்படும். வெளிநாட்டு வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படும். பொது சேவையில் உள்ளவர்களுக்கு அவமானம் நிகழும். அதி நவீன எந்திரங்கள் வாங்க நேரும். மின்சாரம் சம்மந்தப்பட்ட வகையில் செலவுகள் உண்டாகும். தூர தேச பயணத்தினால் பலன் கிடைக்காது.

சனி 6ஆம் இடத்தில் இருப்பது உகந்த இடமில்லை. சிலருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

சனி 7ஆம் இடத்தில் 21.12.2011இல் இருப்பது கண்ட சனி காலம் ஆகும். இந்த நேரத்தில் முக்கியமாக பொருள்கள் காணாமல் போகும். பிறர் விடயத்தில் தலையிடுவதை தவிர்க்கவும்.

பரிகாரம் : சிவன் ஸ்தலத்திற்கும் முருகன் ஸ்தலத்திற்கும் சென்று வரவும்.
கிருத்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகசீரிடம் 1, 2ஆம் பாதம் ஆக 9- பாதம்.

குரு 11-ஆம் இடத்தில் இருப்பது சிறந்தது ஆகும். விலை உயர்ந்த பொருட்களை விற்பனை செய்வதன் முலம் வியாபாரத்தில் நல்ல இலாபம் கிடைக்கும். 09.05.2011 குரு 12-ஆம் இடத்தில் இருப்பது சிறந்தது இல்லை. பல வகையில் ஏமாற்றம் ஏற்படும். வாகனத்தில் செல்லும்போது மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும். செய்யும் தொழிலில் அதிக நஷ்டம் ஏற்படும். உறவினர்கள் மூலம் பிரச்சினைகள் உண்டாகும். மனைவியின் உறவினர்கள் மூலம் பொருள் உதவி கிடைக்கும்.

சனி 5ஆம் இடத்தில் இருப்பது உகந்த இடம். நீண்டகாலமாக உள்ள சொத்து பிரச்சினை தீரும், பணத்திற்கு தட்டுப்பாடு இராது. நீண்ட தூர பயணத்தை தவிர்ப்பது உத்தமம்.

சனி 6ஆம் இடத்தில் 21.12.2011இல் இருப்பது உகந்த இடம் இல்லை. பழைய நண்பர்களால் பிரச்சினைகள் வரும். ஆலயங்களில் முக்கிய பதவியில் உள்ளவர்கள் பதவியை இழக்கக்கூடும்.

பரிகாரம்: சனிக்கிழமைகளில் சனி பகவானுக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றி வரவும். ஆடிபுரம் ஸ்ரீமுருகபெருமானுக்கு அபிஷேகம் அல்லது ஆரத்தி செய்து வரவும். தினமும் காலையில் லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்து அம்மன் ஸ்தலத்திற்கு சென்று வரவும்.
மிருகசீரிடம் 3, 4 திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ஆம் பாதம் ஆக 9- பாதம்.

மிதுன ராசிக்கு 10-ஆம் ஜீவன ஸ்தானத்தில் குரு இருப்பது சிறந்த இடம் இல்லை. பிறர் விடயத்தில் தலையிட்டு அவமானம் ஏற்படும். சொத்தை குத்தகைக்கு எடுப்பதன் மூலம் ஓரளவுக்கு லாபம் கிடைக்கும். 09.05.2011 குரு 11இல் இருப்பது உகந்த இடமாகும். கடல் வியாபாரம் நன்றாக நடக்கும். ஆன்மீக துறையில் சிலருக்கு அதிக நாட்டம் உண்டாகு. விவசாயத்தில் அதிகமான வருவாய். குழந்தைகளுக்கு அதிக பணம் செலவிட நேரும்.

சனி 4ஆம் இடத்தில் இருப்பது உகந்த இடம் அல்ல. (அர்த்தாஷ்டம சனி) இக்காலத்தில் உள்ள இருப்பிடத்தை மாற்ற நேரும்.

சனி 5ஆம் இடத்தில் 21.12.2011இல் இருப்பது உகந்த இடம். பழைய கடன்கள் நீங்கும், உத்தியோகத்தில் இடமாற்றம் ஏற்படும்.

பரிகாரம்: பிரதி திங்கட்கிழமைகளில் சிவனுக்கு பச்சரிசி மாவு அபிஷேகம் செய்து அர்ச்சனை செய்து வந்தால் சகல தோஷங்களும் நிவர்த்தி ஆகும். ஞாயிற்றுக்கிழமையில் பைரவருக்கு மிளகு தீபம் ஏற்றி வரவும்.
புனர் பூசம் 4, பூசம், ஆயில்யம் முடிய ஆக 9- பாதம்.

குரு 9-ஆம் இடத்தில் இருப்பது பாக்கியஸ்தான குரு காலமாகும். இது உகந்த இடமாகும். பல பொருள், அங்காடி ஆரம்பிக்க நல்ல இலாபம் கிடைக்கும். செல்வந்தரின்; தொடர்பு கிடைக்கும். 09.05.2011இல் குரு 10-ஆம் இடத்தில் இருப்பது சிறந்தது இல்லை. செய்யும் தொழில்கள் யாவும் நஷ்டத்தையே தரும். வழக்குகளில் புதிய மாற்றம் உண்டாகும். தூர தேச பயணம் செல்லக்கூடும்.

சனி 3ஆம் இடத்தில் இருப்பது உகந்த இடமில்லை. கண்ணாடி திரவம், பாதரசம், பெட்ரோலிய வியாபாரம் கூட்டாக செய்ய நல்ல லாபம் கிடைக்கும்.

சனி 4ஆம் இடத்தில் 21.12.2011இல் இருப்பது (அர்த்தாஷ்டம சனி) உகந்த இடமில்லை. உடல் ஆரோக்கியத்தில்; பாதிப்பு ஏற்படும். புதிய தொழில் ஆரம்பித்து நஷ்டம் ஏற்படும். சிலருக்கு பெண்களால் அவமானம் ஏற்படும். இரும்பு வகை பொருட்களினால் காயம் உண்டாகும். உஷ்ணத்தினால் நோய் ஏற்படும்.

பரிகாரம் : பிரதி செவ்வாய்க்கிழமையில் ஸ்ரீதுர்கைக்கு எலுமிச்சம் பழ மாலை அணிவித்து அர்ச்சனை செய்து வரவும். தினம் கந்த சஷ்டி கவசம் ஜெபித்து வரவும். வயது முதியவருக்கு அன்னதானம் செய்யவும்.

மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம் ஆக 9- பாதம்.

குரு 8-ஆம் இடத்தில் இருப்பது சிறந்தது இல்லை (அர்த்தாஷ்டம குரு காலம்). வழக்குகளில் பாதகமான தீர்ப்பு கிடைக்கும், வாகனத்தில் பயணம் செய்யும்போது கவனமாக செல்லவும். 09.05.2011இல் குரு 9-ஆம் இடத்தில் இருப்பது சிறந்தது. தடைப்பட்ட திருமணம் தற்சமயம் நடைபெறும், விஞ்ஞான முறையில் வியாபாரம் செய்ய நற்பலன்களை தரும். எதிர்பாராத வகையில் இலாபம் கிடைக்கும்;.

சனி 2ஆம் இடத்தில் இருப்பது உகந்த இடம் அல்ல. ஏழரை ஆண்டு சனி பாத சனி காலமாகும். மாணவர்களுக்கு பிற்போக்கான நிலை உண்டாகும். கால்நடை மற்றும் வாகனத்தில் திடீர் நஷ்டம் ஏற்படும். நீண்ட தூர பயணத்தை தவிர்ப்பது உத்தமம்.

சனி 3ஆம் இடத்தில் 21.12.2011இல் இருப்பது உகந்த இடம் இல்லை. இனிமேல் பொற்காலம் எனலாம். குடும்பத்தில் சுப காரியங்கள் திட்டமிட்டபடி நடைபெறும்.

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமைகளில் லட்சுமி நரசிம்மரை தரிசனம் செய்து வந்தால் நன்மை பயக்கும். வெள்ளிக்கிழமையில் பசுவுக்கு பூஜை செய்து அஷ்டோத்திரம் சொல்லி வந்தால் சகல தோஷம் நிவர்த்தி ஆகும்.
உத்திரம் 2, 3, 4, அஸ்தம், சித்திரை 1, 2ஆம் பாதம் ஆக 9 பாதங்கள்.

குரு 7-ஆம் இடத்தில் இருப்பது உகந்த இடமாகும். வியாபாரிகளுக்கு அமோக இலாபம் கிடைக்கும். குடும்பத்தில் சுப காரியம் நடக்கும். அரசியல்வாதிகளுக்கு எதிர்காலம் யோகம் தரும். 09.05.2011இல் குரு 8ஆம் இடத்தில் இருப்பது உகந்தது இல்லை. தனது புத்திரர்களுக்கு அதிகமாக செலவிட நேரும். பொருட்கள் களவு போக நேரும், கலைத்துறையில் இருப்பவருக்கு பரிசும் பாராட்டும் கிடைக்கும்.

சனி 1ஆம் இடத்தில் இருப்பது உகந்த இடமில்லை. ஏழரை ஆண்டு nஐன்ம சனி காலமாகும். சிலருக்கு உடல் நலக்குறைவு ஏற்படும், மருத்துவ செலவு அதிகரிக்கும்.

சனி 2ஆம் இடத்தில் 21.12.2011இல் இருப்பது பாத சனி காலமாகும். ஏழரை ஆண்டு சனி உகந்த  இடமில்லை. புதிய தொழில் ஆரம்பித்து நஷ்டம் ஏற்படும், அதன் காரணமாக பழைய சொத்தை விற்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். உடல் ஆரோக்கியம் பாதிக்கும்.

பரிகாரம்: அட்டமி திதிகளில் ஸ்ரீ பைரவருக்கு பெரிய அகலில் நல்லெண்ணைய் தீபம் ஏற்றி வரவும். ஞாயிற்றுக்கிழமையில் தென்மேற்கில் உள்ள ராகு பகவானுக்கு இலுப்பை எண்ணெய் தீபம் ஏற்றி வரவும்.
சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3ஆம் -பாதம் ஆக 9 பாதங்கள்.

குரு 6-ஆம் இடத்தில் இருப்பது உகந்த இடம் அல்ல. வெளியிடங்களில் எதிர்ப்;புகள் அதிகமாக இருக்கும். முக்கியமானவர்களினால் பாதிப்பு ஏற்படும். பழைய சொத்து கிடைக்கும்;. 09.05.2011இல் குரு 7-ஆம் இடத்தில் களத்திர குரு உகந்தது. தோல்வியடைந்த வழக்குகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் இருந்து வந்த குழப்ப நிலை மாறும், பணபற்றாக்குறை அதிகமாக இருக்கும்.

சனி 12ஆம் இடத்தில் இருப்பது உகந்த இடமில்லை. ஏழரை ஆண்டு விரைய சனி காலமாகும். தேவையில்லாத செலவு அதிகரிக்கும். விமானம், கப்பல் போன்ற பயணத்தை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படும், கடன் பிரச்சினை அதிகரிக்கும்.

சனி 1ஆம் இடத்தில் 21.12.2011இல் இருப்பது nஐன்ம சனி காலமாகும். ஏழரை ஆண்டு சனி உகந்த  இடமில்லை பூர்வீக சொத்தை விற்க வேண்டிய நிலை இருக்கும். குடும்பத்தில் மருத்துவ செலவு அதிகரிக்கும், மாணவர்களிடையே பிரச்சினை உண்டாகும்.

பரிகாரம்: ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு வடை மாலை மற்றும் வெற்றிலை மாலை ஞாயிறு, வியாழக்கிழமையில் அணிவித்து பிரதட்சணம் செய்து வரவும்.


 

விசாகம் 4, அனுஷம், கேட்டை முடிய ஆக -9 பாதங்கள்.

குரு 5-ஆம் இடத்தில் இருப்பது உகந்த இடம் ஆகும். கல்வியில் புதிய மாற்றம் உண்டாகும். எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும், தொழிலில் ஏற்பட்ட பிரச்சினைகள் விலகும். நல்ல முன்னேற்றம் உண்டாகும். வருமானம் பெருகும். 09.05.2011இல் குரு 6-ஆம் இடத்தில் ரோக ருண ஸ்தான குரு உகந்த இடமல்ல. நீதி மன்றத்திற்கு செல்ல வேண்டி வரும். மதிப்புள்ள பொருள் திருட்டு போக நேரும், உடல் ஊனமுள்ள மனிதரால் பிரச்சினை ஏற்படும், வாகன வகையில் சிறு கண்டம் ஏற்படும்.

சனி 11ஆம் இடத்தில் இருப்பது உகந்த இடம் ஆகும். பொன், பொருள் வியாபாரம் செய்ய நல்ல இலாபம் கிடைக்கும். செய்யும் தொழில் நன்றாக நடைபெறும். திருமணம் தற்சமயம் நடக்கும்.   

சனி 12ஆம் இடத்தில் 21.12.2011இல் இருப்பது ஏழரை ஆண்டு சனி விரைய சனி காலம், புதிய தொழிலை ஆரம்பித்து அதிக நஷ்டத்தை அடைய நேரும். குடும்பத்தில் மன நிம்மதி குறையும். இரவு தூக்கம் சிலருக்கு வராது. மனைவியின் கெடுபிடி அதிகமாக இருக்கும். பணத்திற்கு அதிக தட்டுப்பாடு இருக்கும்.

பரிகாரம்: பைரவருக்கு அட்டமி திதியில் வெள்ளை பூசணிக்காயில் இரட்டை தீபம் ஏற்றி சிகப்பு துணியில் மிளகு முடிச்சு போட்டு அகலில் தீபம் ஏற்றி வரவும்.

 


மூலம், பூராடம், உத்திராடம் 1ஆம் பாதம் ஆக 9 பாதங்கள்.

குரு 4-ஆம் இடத்தில் இருப்பது அர்த்தாஷ்டக குரு காலம். உகந்த இடமல்ல. கொடுக்கல் வாங்கல் விடயத்தில் கவனம் தேவை. பூர்வீக சொத்து வரும். 09.05.2011இல் குரு 5-ஆம் இடத்தில் பூர்வீக புண்ணிய ஸ்தானம் குருவுக்கு உகந்த இடம் ஆகும். இழந்த புகழ் மீண்டும் வரும். சேமிப்பு அதிகம் ஆகும். புதிய சொத்து வாங்க நேரும், புதிய முயற்சிகள் யாவும் வெற்றி கிடைக்கும். சிலர் வெளிநாடு செல்ல வாய்ப்பு கிடைக்கும். பெற்றோர்களின் உடல் ஆரோக்கியம் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மேற்படிப்புக்காக சிலர் வெளிநாடு செல்வார்கள.;

சனி 10ஆம் இடத்தில் இருப்பது உகந்த இடம் அல்ல. பெண்களுக்கு குடும்பத்தில் நிம்மதி குறையும். பொன், பொருள் விற்று பழைய கடனை கொடுக்க நேரும்.

சனி 11ஆம் இடத்தில் 21.12.2011இல் இருப்பது உகந்த இடம். பொன், பொருள், வெள்ளி அடகு வியாபாரம் நல்ல இலாபம் கிடைக்கும். திடீர் அதிர்ஷ்டத்தின் மூலம் ஒரு புதிய சொத்து வாங்க நேரும். பணத்திற்கு பிரச்சினை இராது.  

பரிகாரம்: ஸ்ரீ சரபேஸ்வரருக்கு ஞாயிற்றுக்கிழமையில் அபிஷேகம் மற்றும் ஆதாரனை செய்து வந்தால் பல நன்மைகள் தேடி வரும். வானரங்களுக்கு தயிர் அன்னம் படைக்கவும்.
உத்திராடம் 2, 3, 4, திருவேணம், அவிட்டம் 1, 2ஆம் பாதம் ஆக 9 பாதங்கள்.

குரு 3ஆம் இடத்தில் இருப்பது உகந்த இடமல்ல. மேற்படிப்பு பயில தடை ஏற்படும். கொடுக்கல் - வாங்கல் விடயத்தில் கவனம் தேவை. 09.05.2011இல் குரு 4ஆம் இடத்தில் அர்த்தாஷ்டம குரு காலம் ஆகும். பழைய குற்றம் செய்தவருக்கு தண்டனை கிடைக்கும். கூட்டு தொழிலில் நஷ்டம் ஏற்படும். தொழிலில் கவனம் தேவை. பிரிவினை ஏற்படும்.

சனி 9ஆம் இடத்தில் இருப்பது உகந்த இடம் ஆகும். வெளிநாடு சென்று வியாபாரம் செய்ய நல்ல இலாபம் கிடைக்கும். செய்யும் தொழிலில் மன நிறைவு ஏற்படும். குடும்பத்தில் ஏற்பட்ட கஷ்டங்களுக்கு நல்ல முடிவு கிடைக்கும்.

சனி 10ஆம் இடத்தில் 21.12.2011இல் இருப்பது உகந்த இடம் இல்லை. கணவன் - மனைவி இடையே பெருத்த அளவில் கருத்து வேறுபாடு ஏற்படும். நிலுவையில் உள்ள வழக்குகள் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். புதிய வேலை வாய்ப்புகள் சிலருக்கு கிடைக்கும்.

பரிகாரம்: பொன் நவகிரகங்களை வழிபட நலம் கிடைக்கும்.

அவிட்டம் 3, 4ஆம் பாதம் சதயம், பூராட்டாதி 1, 2, 3ஆம் பாதம் ஆக 9 பாதங்கள்.

குரு 2-ஆம் இடத்தில் இருப்பது உகந்த இடம் ஆகும். அரசு அதிகாரிகளுக்கு ஆதரவு திடைக்கும். தொழில் நன்றாக நடைபெறும். பணம் அளவுக்கு அதிகமாக இருக்கும். 09.05.2011இல் குரு 3-ஆம் இடத்தில் இருப்பது உகந்த இடம் இல்லை. பொருளாதார பற்றாக்குறை ஏற்படும், வியாபாரத்தில் நஷ்டம் உண்டாகும். தொழிலில் கவனம் தேவை 21.11.2011இல் வக்ர நிவர்த்தி 2-இல் குரு இருப்பது சிறந்த இடம், விவசாய பூமியால் நல்ல பலன் கிடைக்கும்.

சனி 8ஆம் இடத்தில் 21.12.2011இல் இருப்பது உகந்த இடம் இல்லை. அஷ்டம சனி காலமாகும். மோட்டார் கனரக வாகனங்களில் பெருத்த நஷ்டம் ஏற்படும்.

சனி 9-ஆம் இடத்தில் இருப்பது உகந்த இடம் ஆகும். குலதெய்வ வழிபாடு நினைத்த படி அமையும். தொழிலில் நல்ல இலாபம் கிடைக்கும்.

பரிகாரம்: ஸ்ரீ சனி பகவான் அஷ்டோத்திரம் சொல்வது, ஸ்ரீ ஆஞ்சநேயர் நாமாவளி சொல்வது நலம்.
பூராட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி முடிய ஆக 9 பாதங்கள்.

குரு 1-ஆம் இடத்தில் இருப்பது உகந்த இடமல்ல. ஜென்ம குரு காலமாகும் ஆடம்பர வாழ்க்கை போன்றவற்றால் தனது சொத்தை இழக்க நேரும். 09.05.2011இல் குரு 2-ஆம் இடத்தில் இருப்பது உகந்த இடம். நீண்ட ஆண்டுகளாக இருந்து வந்த பிரச்சினை ஒரு முடிவுக்கு வரும். மாமியார் வீட்டில் சொத்து சேரும்படியான யோகம் வரும். 07.11.2011இல் வக்ர 12-இல் குரு இருப்பது சிறந்த இடம் இல்லை. பல சிக்கல்;கள் வரக்கூடும்.

சனி 7ஆம் இடத்தில் இருப்பது உகந்த இடம் இல்லை. கெண்ட சனி காலமாகும். பழைய சொத்துக்கள் நல்ல விலைக்கு விற்க முடியும்.

சனி 8-ஆம் இடத்தில் இருப்பது அஷ்டம சனி காலம் ஆகும். உகந்த இடம் இல்லை. விபத்து ஏற்பட வாய்ப்பு அதிகம் உண்டு.

பரிகாரம்: பிரதி தினம் ஸ்ரீ விநாயகரை வணங்கி வரவும். கருடரை பார்த்து நமஸ்கரிக்கவும்.

"சித்திரை புத்தாண்டு பலன்கள் - 2011" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty