2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

'தமிழர்களின் போராட்டங்களை மதிக்கவில்லை'

George   / 2017 மே 05 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஜே.ஏ.ஜோர்ஜ்

"தமிழ் மக்கள் முன்னெடுத்துள்ள அறவழிப் போராட்டங்கள் மற்றும் அவர்களின் பிரச்சினைகள், கோரிக்கைகள் பற்றி, தென்னிலங்கையில் உள்ள அரசியல் தலைவர்களுக்கு விளங்கவில்லை" என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், நாடாளுமன்றில் இன்று தெரிவித்தார.

"கேப்பாப்புலவு, கிளிநொச்சி, இரணைதீவு ஆகிய பகுதிகளில் இராணுவத்தின் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி போராடங்களை முன்னெடுக்கின்றனர். அத்துடன், காணாமல் போன உறவினர்களை விடுவிக்குமாறும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன" என்றார்.

அத்துடன், "இந்த போராட்டங்கள் குறித்து பாராமுகத்துடன் உள்ள சிங்கள தலைமைகள் மனிதாபிமானமற்றவர்களா" என்றும் அவர் குறிப்பிட்டார்.

"பிளவுபடாத நாட்டில் சுயநிர்ணயத்துடனான சமஷ்டி தீர்வொன்றை இந்த அரசாங்கம் வழங்கும் என்று நம்பியுள்ள மக்களுக்கு அது கேள்விக்குறியாக மாறியுள்ளது.

"இந்த நாட்டின் தேசிய இனமான தமிழர்கள் மறந்து; ஜனநாயக போராட்டங்கள் பற்றி பாராமுகாமாக இருப்பது நாட்டின்; இறைமையையே பாதிக்கும்.

தந்தை செல்வநாயகம், அமிர்த்தலிங்கம் ஆகியோரின் அறவழிப் போராட்டங்களையும் தென்னிலங்கைத் தலைவர்கள் அன்றைய காலத்தில் கருத்தில் கொள்ளவில்லை. 

"போராட்டங்கள் மீது தாக்குதல்களை நடத்தினார்கள்.அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரான அமிர்த்தலிங்கம் நாடாளுமன்றத்தில்; உரையாற்றியபோது ஏளனம் செய்தனர். அதன் விளைவுதான் அறவழிப்போராட்டம் ஆயுதப்போராட்டமாக மாறியது" என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .