2024 மார்ச் 28, வியாழக்கிழமை

‘AMW ஸ்டார் அவார்ட்ஸ்'

Princiya Dixci   / 2017 மே 08 , பி.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

அசோசியேட்டட் மோட்டார்வேய்ஸ் (தனியார்) நிறுவனத்தினால் கொழும்பு வோட்டர்ஸ் எட்ஜில் அண்மையில் நடைபெற்ற கண்கவர் விழாவில் அதன் சிறந்த செயல் வீரர்கள் கௌரவிக்கப்பட்டனர். 2016ம் ஆண்டில் நிறுவனத்தை முன்னிலைப்படுத்தப் போராடி எதிர்பார்க்கப்பட்டதிலும் பார்க்க சிறப்பாக செயல்பட்ட பங்காளர்கள் ‘AMW ஸ்டார் அவார்ட்ஸ்' எனும் தலைப்பில் இடம்பெற்ற நிகழ்வில் வெகுமதியளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

இலங்கையில் நிறுவனத்தின் 67 வருட வரலாற்றில் முதன்முறையாக நடாத்தப்பட்ட விழாவில் பிரதம விருந்தினராக லென் ஹண்ட் (Al-Futtaim குழும மற்றும் AMW நிறுவன தலைவர்) கலந்து சிறப்பித்தார். மேலும் AMW நிறுவன பணிப்பாளர்கள் மற்றும் AMW நிறுவன பணிப்பாளர்கள்/ சிரேஷ்ட முகாமையாளர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

சிறந்த தனிப்பட்ட சாதனையாளர்கள் சிறந்த கிளை மற்றும் பிரிவு, பல்வேறு கூறுகளை உள்ளடக்கிய திறன், வாடிக்கையாளர் சேவை மற்றும் வருடத்திற்கான தொகுதி வளர்ச்சிகளும் மதிப்பீடு செய்யப்பட்டு மொத்தம் 55 விருதுகள் வழங்கப்பட்டன. நிறுவனத்திற்காக குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி மேலதிக மைல்கல்லை எட்டிய சில ஊழியர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சவால்மிக்க ஒட்டுமொத்த சம்பியன் விருது வாகன வணிகப் பிரிவினால் வெல்லப்பட்டது.

AMW குழும முகாமைத்துவப் பணிப்பாளர் சமந்த ராஜபக்ஷ வெற்றியாளர்களை வாழ்த்திப் பேசுகையில் கடந்த பல வருடங்களாக பல தடைகளைத் தாண்டி வந்த ஊழியர்களின் விடாமுயற்சியும் அர்ப்பணிப்பும் இச் சிறந்த தருணத்தில் வெளிப்படுத்தப்பட்டது எனக் குறிப்பிட்டார்.

நிகழ்வில் உரையாற்றிய பிரதம விருந்தினர் லென் ஹண்ட் AMW பங்காளிகளின் சிறந்த செயல்திறனை ஆணித்தரமாக தெளிவுபடுத்தியதுடன் அவர்களை மேலும் முன்னோக்கிச் சென்று வெற்றிகளைக் காண வலியுறுத்தினார். சிறந்த சாதனைகளைத் தக்க வைக்க ஊக்குவிக்கும் வார்த்தைகளையும்  ஹண்ட் வழங்கினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X