மொபிடெல் காஷ் பொனான்ஸா: வெற்றியாளர்களுக்கு புதிய மொன்டெரோ

தேசிய கையடக்கச் சேவை வழங்குனரான மொபிடெல் அதன் காஷ் பொனான்ஸா மொன்டெரோ எக்ஸ்ட்ராவெகன்ஸா அதிர்ஷ்ட செயற்திட்டம் 'சீசன் - 2' ன் மூலம் 2017ஆம் ஆண்டின் மொபிடெல் கேஷ் பொனான்ஸா மொன்டெரோ எக்ஸ்ட்ரா வெகன்ஸா மார்ச் மாத வெற்றியாளராக ராஜகிரியவைச் சேர்ந்த சாமர நளின் தெரிவு செய்யப்பட்டார். மொபிடெலின் பிரதான நிறைவேற்று அதிகாரியான நளின் பெரேரா வெற்றியாளருக்கு பரிசைக் கையளித்தார். இவ்விருது வழங்கும் வைபவம் அண்மையில் பதுளை காற்பந்தாட்ட மைதனத்தில் இடம்பெற்றது. இதன் போது மொபிடெலின் களியாட்டக் கொண்டாட்டம் மற்றும் இசை நிகழ்ச்சியும் இடம் பெற்றன.

ஏற்கனவே 2017 ஆம் ஆண்டில் 2 வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்பட்டு மொபிடெலிடமிருந்து சொகுசு மொன்டெரோ வாகனங்களை ஒருவருக்கு ஒன்று வீதம் எடுத்துச் சென்றனர். ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களுக்கான அதிர்ஷ்ட வெற்றியாளர்கள் முறையே ஏ. மெ. சீ. பீ. உபஷாந்த – கொடகவெல மற்றும்  கே.ஏ.டி.சீ. ஜயதிஸ்ஸ குருப்பு – மொனராகலை, ஆவர்.

இந்த தனித்துவமான செயற்திட்டத்தின் உச்ச கட்ட மகிழ்ச்சி என்னவெனில் 2017ஆம் ஆண்டின் மீதமுள்ள மாதங்களுக்கும் மேலும் 9 சொகுசு மொன்டெரோ வாகனங்களை மொபிடெல் வழங்கவுள்ளது. இச் செயற்திட்டத்தின் மூலம் 12 வெற்றியாளர்களுக்கு மாதம் ஒரு சொகுசு மொன்டெரோ வீதம் 12 மாதங்களுக்கு வழங்கவுள்ளது. இதற்கு மேலாதிகமாக மொபிடெல் ஒவ்வொருவருக்கும் ரூ.500 ஐ பணப்பரிசாக வழங்குகிறது. வருடம் முழுவதும் மொத்தம் 219,000 அதிர்ஷ்ட வெற்றியாளர்களுக்கு வழங்கப்படுகிறது. சேவை வழங்குனரிடமிருந்து முழுவதுமாக ரூ.

350 மில்லியன் தொகையை மொபிடெல் வாடிக்கையாளர்கள் 2017 ஆம் ஆண்டு முழுவதும் பெற்றுக் கொள்ள எதிர்ப்பார்க்க முடியும். மார்ச் மாதத்துக்கான அதிர்ஷ்டசாலி வெற்றியாளருக்கு புத்தம் புதிய மொன்டெரோவுடன் காஷ் பொனான்ஸா மொன்டெரோ எக்ஸ்ட்ரா வெகன்ஸா மூலம் 54,003 வாடிக்கையாளர்களுக்கு  ரூ. 92 மில்லியன் தொகை பெறுமதியான பரிசுகள் 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை வழங்கப்பட்டுள்ளது.


மொபிடெல் காஷ் பொனான்ஸா: வெற்றியாளர்களுக்கு புதிய மொன்டெரோ

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.