2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

சகஸ்ர சங்காபிசேகம்

Niroshini   / 2017 மே 13 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார் 

அம்பாறை - கோளாவில் அருள்மிகு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய புனராவர்த்தன அஷ்டபந்தன ஏககுண்டயாக  மஹா கும்பாபிசேகத்தையொட்டி, 1008 அஸ்டோத்தர சகஸ்ர  சங்காபிசேகம் நேற்று (12) நடைபெற்றது.

இதன்போது, அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்தில் இருந்து பால்குட பவனி இடம்பெற்றது.

தொடர்ந்து ஆலயத்தில் நடைபெற்ற சங்காபிசேக பூஜையினை தொடர்ந்து 1008 சங்குகள் அம்மன் மீது சொரியப்பட்டதுடன், பிரதான கும்பம் வெளி வீதி உலா நடைபெற்றது.

கும்பாபிசேகத்தினை தொடர்ந்து 1 2நாட்கள் மண்டலாபிசேக பூசைகள் நடைபெற்று வந்ததுடன், நேற்று நடைபெற்ற அஸ்டோத்தர சகஸ்ர 1008 சங்காபிசேத்துடன் மண்டல பூஜைகளும் கும்பாபிசேக கிரியைகளும் நிறைவுற்றன.

ஆலய தலைவர் கே.கமலமோகனதாசன் தலைமையில் நடைபெற்ற கிரியைகள் சிவாகம கிரியாஜோதி சிவஸ்ரீ க.கு சீதாராம் குருக்களின் தலைமையில் சிவஸ்ரீ கௌரி சங்கர் சர்மா குருக்கள் உள்ளிட்ட குருமார்கள் நடாத்தி வைத்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .