2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

‘பிறந்த மண்ணை விற்கவியலாது’

Princiya Dixci   / 2017 மே 16 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

நரிக்குணம் கொண்ட, சுயநல எண்ணம் கொண்டோரிடம் ஆலோசனை கேட்பது ஆபத்தானது. இத்தகையோர் எப்பொழுதும் பிறரிடத்தில் தமக்காக ஆதாயங்களை நோக்கியே காய்களை நகர்த்துவார்கள்.

எமது நாட்டில் யுத்தம் சூழ்ந்த காலத்தில் இத்தகைய பேர்வழிகள் செய்த அடாத காரியங்கள் எண்ணிலடங்காதவை.

இந்தக் காணி, வீடுகளை இங்கே வைத்து, என்ன செய்யப் போகின்றீர்கள்? பேசாமல் வந்த விலைக்கு விற்று எங்காவது சென்று விடுங்கள். அதற்கான ஏற்பாடுகளை நான் செய்து தருகின்றேன் என்று ஆலோசனைகளை இலவசமாக வழங்கி, மறுபுறம் அடாத, குறைந்த விலைக்கு அவைகளை விற்கவைத்துப் பொருளீட்டுவதுடன் தாங்களும் மேலதிகமாக வீடு, வாசல், காணிகளை வாங்கிக் குவித்தார்கள். இன்று இவைகளின் பெறுமதி பன்மடங்கானது.

ஆனால், இன்று அதனை விற்றவர்கள் தங்கள் செயலுக்காக மீளாத்துயரில் இருக்கின்றனர். பிறந்த மண்ணை விற்கவியலாது. சொந்த மண் சொர்க்கத்திலும் மேலானது.

வாழ்வியல் தரிசனம் 16/05/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .