முறையற்ற அதிபர் நியமனங்கள் குறித்து முறைப்பாடு

-எஸ்.நிதர்ஷன்

வடமாகாண கல்விப் பணிப்பாளரால் மேற்கொள்ளப்பட்ட முறையற்ற அதிபர் நியமனங்கள் தொடர்பாக, மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கை ஆசிரியர் சங்கத்தினால், திங்கட்கிழமை (15) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

“யாழ்ப்பாணம் கல்வி வலயத்துக்குட்பட்ட யாழ். காசிப்பிள்ளை வித்தியாலயம், நீர்வேலி அ...பாடசாலை, கலட்டி அ.மி... பாடசாலை, பத்தைமேனி இரத்தினேஸ்வரி வித்தியாலயம், வலிகாமம் கல்வி வலயத்துக்குட்பட்ட உடுவில் அ.மி...பாடசாலை, பொன்னாலை வரராஜப்பெருமாள் வித்தியாலயம், தீவகம் கல்விவலயத்துக்குட்பட்ட அல்லைப்பிட்டி றோ....பாடசாலை, தென்மராட்சி கல்விவலயத்துக்குட்பட்ட வரணி வடக்கு சைவப்பிரகாச பாடசாலை, போக்கட்டி றோ....பாடசாலை, வடமராட்சி கல்வி வலயத்துக்குட்பட்ட வெற்றிலைக்கேணி பரமேஸ்வரா வித்தியாலயம், வெற்றிலைக்கேணி றோ.... பாடசாலை, கிளிநொச்சி கல்வி வலயத்துக்குட்பட்ட கிளிநொச்சி தர்மகேணி அ...பாடசாலை, கிளிநொச்சி முகாவில் அ...பாடசாலை போன்ற பாடசாலைகளுக்கான அதிபர் வெற்றிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பம் கோரப்பட்டிருக்கவில்லை.

“தகுதியான அதிபர்களுக்கு பொருத்தமான பாடசாலைகள் வழங்கப்படாமல், பல பாடசாலைகளில் அதிபர் தரத்தில் உள்ளவர்கள் ஒரே பாடசாலையில் மூன்றுக்கும் அதிகமான பதில் அதிபர்களாகவே நியமிக்கப்பட்டுள்ளனர்.

“கல்வியமைச்சின் சுற்றறிக்கைகளை மீறி, ஆசிரியர் தரத்தில் உள்ளவர்களுக்கு வடமாகாணக் கல்விப் பணிப்பாளரால் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளமை எமது சங்கத்தின் கவனத்துக்குக் கிடைக்கப்பெற்றுள்ளது

“கடந்த ஆண்டு நடைபெற்ற அதிபர் தரம் 3 போட்டிப்பரீட்சையில் வடமாகாணத்தில் 389 பேர் அதிபர்களாக நியமனம் பெற்று தகுதியான பயிற்சிகளை மேற்கொண்டு வெளியேறியுள்ள நிலையில் அவர்களுக்குப் பொருத்தமான பாடசாலைகளை வழங்காமல் புதிய அதிபர் நியமனம் தொடர்பான 05.09.2016 திகதிய  2016/ED/E/24 இலக்க அமைச்சரவைப் பத்திரத்தையும் மீறி ஆசிரியர் தரத்தில் உள்ளவர்களுக்கு அதிபர் பதிவி வழங்கப்பட்டுள்ளமை மிகப் பாரிய முறைகேடாகும்.

“அத்துடன் ஒரு பாடசாலையில் அதிபர் வெற்றிடம் உருவாகுமானால் 06.07.1998 திகதிய 1998/23 சுற்றறிக்கைக்கமையவே  அப்பாடசாலைக்கு அதிபர் வெற்றிடம் தொடர்பாக விண்ணப்பங்கள் கோரப்பட்டு  விண்ணப்பிப்பவர்களுள் தகுதியானவர்களுக்கு நியமனம் வழங்கப்படவேண்டும்.

“இவ்வாறான முறையான நடைமுறைகளைப் பின்பற்றாது அதிபர் தரத்தினையுடையவர்கள் வடமாகாணத்தில் அதிகமாக இருக்கின்ற போதிலும் ஆசிரியர் தரத்தில் இருப்பவர்களை அதிபர்களாக நியமித்தமையானது வடமாகாணக் கல்விப் பணிப்பாளரால் மேற்கொள்ளப்பட்ட அதிகாரதுஸ்பிரயோகம் என்பதுடன் இலங்கை அரசியலமைப்பில் ஏற்று அங்ககிகரிக்கப்பட்ட  அடிப்படை உரிமையையையும் மீறும் செயலாகும்.

“இவ்வாறான முறைகேடுகளுக்கு எதிராக விசாரணை மேற்கொண்டு தீர்வினை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்” என அம்முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது


முறையற்ற அதிபர் நியமனங்கள் குறித்து முறைப்பாடு

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.