2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

பள்ளித்திடலில் புதிய வீடமைப்பு

Princiya Dixci   / 2017 மே 18 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

பொலன்னறுவை பள்ளித்திடல் கிராமத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேன் அமைப்பினுடைய உதவியுடன், இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியினால் அமைக்கப்பட்ட 50 வீடுகளைக் கொண்ட புதிய வீடமைப்பு திட்டம், மீள்குடியேற்ற புனர்வாழ்வு மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சரும் ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேசன் நிறுவனத்தின் தலைவருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வினால்  புதன்கிழமை மாலை திறந்து வைக்கப்பட்டது.

50 பயனாளிகளுக்கு இதன்போது வீடுகள் கையளிக்கப்பட்டன.

இந்த வைபவத்தில் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்,

“1990ஆம் ஆண்டில் விடுதலைப்புலி பயங்கரவாதிகளின் தாக்குதலின் காரணமாக பொலன்னறுவை மாவட்டத்தின் அக்பர் புறம் மற்றம் பள்ளித்திடல் கிராமங்களில் 100 பேர் கொலை செய்யப்பட்டதுடன், அவர்களின் வீடுகள் உள்ளிட்ட சொத்துகளும் அழிக்கப்பட்டன.

“இவர்கள், அரசாங்கத்தினாலும் கைவிடப்பட்டு, எந்த வித அடிப்படை வசதிகளும் இன்றி, களிமண் வீடுகளில் வாழ்ந்து வந்த நிலையிலேயே, இவர்களுக்கு இந்த வீடுகளை நிர்மானித்து வழங்கியுள்ளோம். அடிப்படை வசதிகளின்றி, இக்கிராம மக்கள் மிகவும் கஷ்டப்பட்டார்கள்” என்றார்

இந்த வைபவத்தில், ஹிறாபுவண்டேசன் நிறுவனத்தின் தலைவர் மௌலவி ஏ.எல்.மும்தாஸ் மதனீ, பொலன்னறுவ மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் எம்.பஸீர்,  காத்தான்குடி நகர சபையின் முன்னாள் தவிசாளர் எஸ்.எச். அஸ்பர் மற்றும காத்தான்குடி நகர சபை முன்னாள் உறுப்பினர் ரஊப் ஏ மஜீட் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .