வியாழக்கிழமை, 23 பெப்ரவரி 2012
தொடர்பு  | English | සිංහල

ஜோதிடம்

இன்றைய பலன்கள் (26.11.2011)

 

 

இன்றைய பலன்கள் (26.11.2011) 

   

இன்றைய பலன்கள் (07.11.2011)

இன்றைய பலன்கள் (07.11.2011)

   

இன்றைய பலன்கள் (23.08.2011)

இன்றைய பலன்கள் (23.08.2011)

   

இன்றைய பலன் (07.08.2010)

இன்றைய பலன் (07.08.2010)




காரியம் தடை, சிலவிதமான சிக்கல்கள், வியாபாரத்தால் பிரச்சினை ஏற்பட்டு பகை.
அஸ்வினி: சண்டை  
பரணி: சிக்கல்
கிருத்திகை 1ஆம் பாதம்: பகை
 

 


வேண்டாத உணவால் பிரச்சினை, மகான்களின் தரிசனம், முயற்சியால் வெற்றி.
கிருத்திகை 2, 3, 4: துன்பம்
ரோகிணி: மகிழ்ச்சி  
மிருகசீரிடம் 1, 2: நிம்மதி
 

 


வீண்சிரமம்,  மயக்கம்,  வேண்டாத செலவு.
மிருகசீரிடம் 2, 3: துன்பம்
திருவாதிரை: சண்டை
புனர்பூசம்: செலவு
 

 


முயற்ச்சியால் மட்டும் வெற்றி, சுவையான சாப்பாடு, பெண்களால் உதவி, இன்பம்.
புனர்பூசம்: இன்பம்  
பூசம்: வெற்றி
ஆயில்யம்: மகிழ்ச்சி
 


காரியம் தடை, உடல் நலம் பாதிப்பு, மனஸ்தாபம்.
மகம்: சண்டை
பூரம்: மனஸ்தாபம்
உத்திரம் 1ஆம் பாதம்: நோய் துன்பம்
 

 


தூரதேசத்தில் இருந்து செய்தி, சுவையான சாப்பாடு முயற்சியால் மட்டும் வெற்றி.
உத்திரம் 2, 3, 4: வெற்றி
அஸ்தம்: மகிழ்ச்சி
சித்திரை 1, 2ஆம் பாதம்: இன்பம்.
 

 


மனம் சஞ்சலம், வேண்டாத செலவுகள், தோல்வி.
சித்திரை 3, 4ஆம் பாதம்: தோல்வி
சுவாதி: தவறான வார்தையால் துன்பம்
விசாகம் 1, 2, 3: செலவு
 

 


தூரதேசத்தில் இருந்து செய்தி, சுவையான சாப்பாடு, முயற்சியால் மட்டும் வெற்றி.
விசாகம் 4: வெற்றி
அனுசம்: சுபம்
கேட்டை: மகிழ்ச்சி
 

 


காரியம் தடை, சிலவிதமான சிக்கல்கள், வேண்டாத செலவு.
முலம்: காரியம் தடை
பூராடம்: செலவு
உத்திராடம் 1ஆம் பாதம்: சிக்கல்
 

 


காய்ச்சல், தலைவலி சாதனை வெற்றி அடைதல், பிறர் உதவி நாடுதல்.
உத்திராடம் 2, 3, 4: நோய்
திருவோணம்: நிம்மதி கெடுதல்
அவிட்டம் 1, 2: வெற்றி
 

 


மனம் சஞ்சலம், வேண்டாத செலவுகள் தோல்வி.
அவிட்டம் 3, 4: தோல்வி
சதயம்: செலவு
பூரட்டாதி 1, 2, 3: துன்பம்
 

 


பெண்களால் உதவி, இன்பம். சுவையான சாப்பாடு, முயற்சியால் மட்டும் வெற்றி.
பூரட்டாதி 4: இன்பம்
உத்திரட்டாதி: மகிழ்ச்சி  
ரேவதி: வெற்றி

   

இன்றைய பலன்கள் (06.08.2010)

இன்றைய பலன்கள் (06.08.2010)




வேண்டாத உணவால் பிரச்சினை, மகான்களின் தரிசனம், முயற்சியால் வெற்றி.
அஸ்வினி: மகிழ்ச்சி
பரணி: நோய்
கிருத்திகை 1ஆம் பாதம்: இன்பம்
 

 


சாதனை வெற்றி அடைதல். பிறர் உதவி நாடுதல், காய்ச்சல்,  தலைவலி.  
கிருத்திகை 2, 3, 4: வெற்றி
ரோகிணி: மகிழ்ச்சி  
மிருகசீரிடம் 1, 2: வெற்றி
 

 


உடல் நலிவு, மனதால் குழப்பம், துக்கம். பெண்களுடன் விவாதம்.
மிருகசீரிடம் 2, 3: தெய்வீக வழிபாடுகளால் நன்மை
திருவாதிரை: சுகம் இன்பம்
புனர்பூசம்: சண்டை
 

 


பொழுதுபோக்கு சம்மந்தப்பட்டவைகளுக்கு செலவுசெய்தல். தனலாபம் வியாபாரத்தில் புதிய தொடர்பு.
புனர்பூசம்: புதிய தொடர்பு   
பூசம்: வசதிகளால் நன்மை
ஆயில்யம்: மகிழ்ச்சி
 


வேண்டாத உணவால் பிரச்சினை, மகான்களின் தரிசனம். முயற்சியால் வெற்றி.
மகம்: நோய் துன்பம்  
பூரம்: வெற்றி
உத்திரம் 1ஆம் பாதம்: சுபம்
 

 


மகான்களின் தரிசனம், சங்கீதத்தில் ஆர்வம் அதனால் மகிழ்ச்சி. பெண்களால் மகிழ்ச்சி.
உத்திரம் 2, 3, 4: மகிழ்ச்சி
அஸ்தம்: தெய்வீக வழிபாடுகளால் நன்மை
சித்திரை 1, 2ஆம் பாதம்: சுகம் இன்பம்
 

 


பெண்களுடன் விவாதம், கடினமாக பேச்சுவார்த்தை, மனம் அமைதி.
சித்திரை 3, 4ஆம் பாதம்: நிம்மதி கெடுதல்.
சுவாதி:துன்பம்
விசாகம் 1, 2, 3: விவாதம்
 

 


அழகிய ஆடை ஆபரணங்கள் சேருதல், நல்ல காரியங்கள் செய்வதற்கு வழிகிடைத்தல், தனலாபம்.
விசாகம் 4: சுகம் இன்பம்
அனுசம்: மகிழ்ச்சி
கேட்டை: தனலாபம்
 

 


அதிகாரிகளுடனும் பகைவர்களுடனும் பகை. மகான்களின் தரிசனம், முயற்சியால் வெற்றி.
மூலம்: மகிழ்ச்சி
பூராடம் : வெற்றி
உத்திராடம் 1ஆம் பாதம்: பகை
 

 


நல்ல காரியங்கள் செய்வதற்கு வழிகிடைத்தல். நல்லவர்கள் சேர்க்கை, தனலாபம்.
உத்திராடம் 2, 3, 4: தனலாபம்
திருவோணம்: சுகம் இன்பம்
அவிட்டம் 1, 2: வெற்றி
 

 


பெண்களால் மகிழ்ச்சி. சுவையான சாப்பாடு, பொழுது போக்குகளில் ஈடுபடுதல் கவனம் தேவை
அவிட்டம் 3, 4: கவனம் தேவை
சதயம்: இன்பம்
பூரட்டாதி 1, 2, 3: மகிழ்ச்சி
 

 


அழகிய ஆடை ஆபரணங்கள் சேருதல், நல்ல காரியங்கள் செய்வதற்கு வழிகிடைத்தல், தனலாபம்
பூரட்டாதி 4: இன்பம்
உத்திரட்டாதி: மகிழ்ச்சி
ரேவதி: தனலாபம்

   

இன்றைய பலன்கள் (09-07-2010)

மேஷம் - மனநிம்மதி

ரிஷபம் - திட்டம்

மிதுனம் - பழுது

கடகம் - அந்தஸ்து

சிம்மம் - சிந்தனை

கன்னி - பணவரவு

துலாம் - தொந்தரவு

விருச்சிகம் - காரியசித்தி

தனுசு - உற்சாகம்

மகரம் - ஆதாயம்

கும்பம் - உறுதி

மீனம் - சந்திப்பு
   

இன்றைய பலன் - ஜூலை 08ஆம் திகதி

இன்றைய பலன் - ஜூலை 08ஆம் திகதி

மேஷம் - மீட்டல்

ரிஷபம் - சண்டை

மிதுனம் - செலவு

கடகம் - திறமை

சிம்மம் - புத்துணர்ச்சி

கன்னி - அலைச்சல்

துலாம் - நாவடக்கம்

விருச்சிகம் - அனுபவம்

தனுசு - திட்டம்

மகரம் - பொலிவு

கும்பம் - பேச்சு

மீனம் - வேலை
   

16-03-10 to 22-03-10

மேஷம் (அசுவினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
 
மேஷ ராசிநாதன் செவ்வாய் 7-10-2009 முதல் 28-5-2010 வரை கடகத்தில் நீசமாக இருக்கிறார். பொதுவாக ஒரு ராசியில் 45 நாட்கள் அல்லது 50 நாட்கள் இருக்கும் செவ்வாய் சுமார் எட்டு மாத காலம் நீச ராசியில் இருப்பது ஒரு வித்தியாசமான சஞ்சாரம். அதிலும் அவர் மேஷம், விருச்சிகத்தில் ஆட்சியாகவோ அல்லது மகரத்தில் உச்சமாகவோ இருந்தார் என்றால் ஒரு சிறப்பு. ஆனால் அவர் கடகத்தில் நீச ராசியில் இவ்வளவு காலம் தங்கியிருப்பது எல்லாருக்கும் ஒரு கெடுதலான பலன். குறிப்பாக மேஷ ராசி, மேஷ லக்னம், விருச்சிக ராசி, விருச்சிக லக்னம், கடக ராசி, கடக லக்னம் ஆகியோருக்கு எல்லாம் இந்த எட்டு மாத காலமும் ஒவ்வொரு வகையிலும் பாதிப்புதான். இதற்கிடையே செவ்வாயின் வக்ரமும் குதிரை கீழே தள்ளி குழியையும் பறித்த கதையாக ஆகிவிட்டது. செவ்வாய் ரத்த காரகன் என்பதால் ரத்த சம்பந்தமான நோய், வைத்தியச் செலவுகளும்; சகோதர காரகன் என்பதால் சகோதர வகையில் பாதிப்புகளும் இழப்புகளும் ஏற்பட்டன. பலருக்கு உடல் ஆரோக்கியமும் கெட்டது. இன்னும் இரண்டு மாத காலம் செவ்வாயின் தாக்குதலைச் சந்தித்து தப்பிக்க முருகனை வழிபடுங்கள்.
 

 

 

   ரிஷபம் (கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
 
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 11-ல் உச்சமாக இருக்கிறார். அவர் உச்சமாக இருந்தாலும் அவருக்கு வீடு கொடுத்த குரு அஸ்தமனம். அவருக்கு சாரம் கொடுக்கும் புதன் (ரேவதி) நீசம். அதனால் 1, 6-க்குடைய பலனில் (சுக்கிரன் 1, 6-க்குடையவர்) 1-ஆம் இடத்துப் பலனைக் காட்டிலும் 6-ஆம் இடத்துப் பலனே முதன்மையாக நடக்கும். 1-ஆம் இடம் என்பது செயல், கௌரவம், திறமை, புகழ், கீர்த்தி. 6-ஆம் இடம் என்பது நோய், கடன், எதிரி, வைத்தியச் செலவு, போட்டி, பொறாமை இவற்றைக் குறிக்கும் இடம். ஒரு கிரகத்திற்கு பாபத் தன்மை வலுவாக இருந்தால் பாப ஆதிபத்தியமே முதலில் வேலை செய்யும். சுபத் தன்மை வலுவாக இருந்தால் சுப ஆதிபத்தியமே வேலை செய்யும். சுக்கிரன் உச்சமாக இருந்தாலும் வீடு கொடுத்தவர், சாரம் கொடுத்தவர் எல்லாம் பலமிழந்த நிலையில் இருப்பதால் சுக்கிரனின் 6-ஆம் இடத்துப் பலன்களையே நீங்கள் சந்திக்க நேரும். மேலும் சுக்கிரனுக்கு சனி பார்வை கிடைப்பதால்- சனியும் வக்ரம் என்பதால்- சனி 5-ல் இருக்கும் காரணத்தால் பிள்ளைகள் வகையிலும் தொல்லைகளைச் சந்திக்கலாம். அல்லது மனத்தளவிலே வெளியில் சொல்ல முடியாத வேதனைகளையும் சோதனைகளையும் சந்திக்கலாம்.
 

 
 
மிதுனம் (மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)
 
மிதுன ராசிநாதன் புதன் 10-ல் நீச ராசியில் இருக்கிறார். ராசிக்கு கேந்திரமாக இருப்பதாலும் உச்சம் பெற்ற சுக்கிரனோடு சேர்ந்திருப்பதாலும் புதனுக்கு நீசபங்கம் கிடைக்கிறது. ஆனால் நீசபங்க ராஜயோகம் கிடைக்கவில்லை. ஒரு நீசபங்கம் பெற்ற கிரகம்- அந்த கிரகத்திற்கு 5, 9 என்ற திரிகோணாதிபதிகளின் சம்பந்தம் கிடைத்தால் நீசபங்க ராஜயோகமாகும். நீசகிரகம் பங்கம் அடைவது ஒரு பலன். நீசபங்கம் பெற்ற கிரகம் ராஜயோகத்தைத் தருவது இன்னொரு பலன். ஒரு வேட்பாளர் லட்சக்கணக்கில் செலவழித்தும் தேர்தலில் தோற்றுவிட்டால் நீசம். கடைசி நேரத்தில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தி தோற்ற வேட்பாளர் வெற்றி வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் நீசபங்கம். அப்படி வெற்றி பெற்ற வேட்பாளருக்கு மந்திரி பதவி கிடைத்துவிட்டால் நீசபங்க ராஜயோகம். ஜென்ம ராசியில் கேது நிற்பதாலும் சனி பார்ப்பதாலும் புதன் நீசபங்கம். பெற்றாலும் ராஜயோகப் பலனைச் செய்ய மாட்டார் என்பது கருத்து. ஆனால் 10-க்குடைய குரு 9-ல் நின்று ராசியைப் பார்ப்பதால் வேறு வகையில் உங்களுக்கு ஆறுதல் பரிசு போல நன்மைகள் நடக்கலாம். கெடுதல்கள் அணுகாது.
 

 

 
  கடகம் (புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)
 
கடக ராசிக்கு 5, 10-க்குடைய செவ்வாய் 2009- ஒக்டோபர் முதல் ஜென்ம ராசியில் நீசமாக இருக்கிறார். 2010- மே மாதம் வரை அவர் நீசமாகத்தான் இருப்பார். இதன் மத்தியில் சிறிது காலம் குரு மகரத்தில் நீசமாக இருந்து செவ்வாயைப் பார்த்தபோது எதிர்பாராத சில நன்மைகளையும் அனுபவித்து இருக்கலாம். ஆனால் 2009 டிசம்பர் முதல்- குரு கும்பத்தில் வந்த நாள் முதல் குருவும் செவ்வாயும் 6, 8-ஆக இருந்த காரணத்தால் ஏழரைச்சனி விலகியும் கடக ராசிக்காரர்களுக்கு முழுமையான எதிர்பார்த்த நன்மைகளைச் சந்திக்க முடியாமல் ஏமாற்றம் ஆனது. அதிலும் செவ்வாய் வக்ரம், குரு அஸ்தமனம் என்ற நிலையில் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத கதையாக பல காரியங்கள் தள்ளிப்போனது. சிலருக்கு வருமானமே இல்லாத குறை; சிலருக்கு ஆயிரக்கணக்கில்- லட்சக்கணக்கில் பணம் புரண்டாளும் வேறு வகையில் எதிர்பார்த்தவை நடக்காமல் ஏமாற்றமான நிலை; சிலருக்கு தொழில் யோகம், தனவரவு இருந்தும் அரசாங்கத் தொல்லை. இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாதிப்பு. தற்போது குரு அஸ்தமனம் நீங்கியது. (22-3-2010 குரு உதயம்). ஓரளவு தடைகள் விலகும். செயல்களில் வேகம் இருக்கும்.
 

 

 

  சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)
 
சிம்ம ராசிநாதன் சூரியன் 8-ல் மறைகிறார். அவரோடு 2, 11-க்குடைய புதனும், 3, 10-க்குடைய சுக்கிரனும் மறைகிறார்கள். இவர்களை சனி (6-க்குடையவர்) பார்ப்பது ஒரு கெடுதல். அவர்களுக்கு வீடு கொடுத்த குரு (மீன ராசிக்கு) 12-ல் மறைவது இன்னொரு கெடுதல். அதேசமயம் 5-க்குடைய குரு 7-ல் நின்று ராசியைப் பார்ப்பது கெடுதலிலும் நல்லது. என்றாலும் ஏழரைச்சனி வக்ரம் என்பதால் வசதி வாய்ப்பு, சௌகர்யங்களுக்குக் குறைவில்லை என்றாலும், நன்றாகப் படிக்கும் பள்ஸ் டூ மாணவன் பரீட்சையில் தெளிவாக எழுதாமல், மெரிட் மார்க் கிடைக்காமல் பார்டர் மார்க்கில் பாஸ் பண்ணிய மாதிரித்தான். மேற்படிப்பு இன்ஜினியரிங் காலேஜிற்கு மெரிட் சீட் கிடைக்காமல் பேமெண்ட் கோட்டாவில் லட்சக்கணக்கில் செலவழித்து சீட் வாங்கிய மாதிரிதான். சனியின் வக்ரம் உக்ர பலம் என்பதால் ஏமாற்றங்களையும் இழப்புகளையும் சந்திக்க நேரும். வாரக் கடைசியில் மார்ச் 22-ஆம் தேதி குரு அஸ்தமனம் நீங்கி உதயமான பிறகு, சிம்ம ராசியைப் பார்க்கும் குருவினால் எதிர்பாராத முன்னேற்றங்களையும் திருப்பங்களையும் சந்திக்கலாம். அது உங்களுடைய எதிர்காலத்திற்கு அஸ்திவாரமாகவும் அமையலாம்.
 

 

 
 கன்னி (உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)
 
கன்னி ராசிநாதன் புதன் மீனத்தில் நீசமாக இருக்கிறார். நீசம் பெற்ற ஒரு கிரகத்திற்கு நீசம் என்பது ஒரு நிலை; நீசபங்கம் என்பது ஒரு நிலை; நீசபங்க ராஜயோகம் என்பது ஒரு நிலை. இந்த மூன்று நிலையின் பலனையும் ஏற்கெனவே மிதுன ராசிப் பலனில் பார்த்திருக்கிறோம். ஜென்மத்தில் சனி நிற்பதும் மிதுனத்தில் கேது நிற்பதும் புதனுடைய 1-ஆம் பாவம், 10-ஆம் பாவத்திற்கு பலக்குறைவுதான். அதாவது புதன் கிரகத்தின் இரண்டு ஆதிபத்திய பாவத்திலும் பாவ கிரக சம்பந்தம் இருந்தால், அந்த பாவ ஆதிபத்தியம் பாப பலனாக மாறும். அதாவது அசுப பலன். கன்னி ராசிக்கு குரு 6-ல் இருந்து 10-ஆம் பாவத்தைப் பார்ப்பதால் ஓரளவு தொழில் இயக்கம் தடைபடாமல் செயல்பட்டாலும் போட்டி, பொறாமை, வேலையாட்கள் பிரச்சினை, கடன், வட்டி போன்ற 6-ஆம் இடத்து ஆதிக்கமும் உங்களுக்கு சந்தோஷத்தைக் கொடுக்காது. மேலும் ஜென்மச்சனி வக்ரம் என்பதால் (வக்ரத்தில் உக்ர பலம்) சனியின் வக்ரம் தெளியும் வரை ஏழரைச் சனியின்- ஜென்ம சனியின் பாதிப்பு உங்களைப் பாடாய்ப்படுத்தத்தான் செய்யும். வாரக் கடைசியில் (22-3-2010) குரு அஸ்தமனம் நீங்குவதால் ஒரு ஆறுதல் பலன் எதிர்பார்க்கலாம்.
 

 

 
 துலாம் (சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)
 
துலா ராசிக்கு 10-ல் 2, 7-க்குடைய செவ்வாய் 2009- ஒக்டோபர் முதல் நீசமாக இருக்கிறார். சில நேரங்களில் கடுமையான நீசமாகவும், சில நேரங்களில் நீசபங்கமாகவும் செவ்வாய் செயல்பட்டார். மகரத்தில் குரு நின்று செவ்வாயைப் பார்த்த காலம், நீசனை நீசன் பார்த்ததால் நீசபங்கமாக இருந்தது. பிறகு குரு கும்பத்தில் மாறி செவ்வாயும் குருவும் 6, 8-ஆக இருக்கும் காலம் நீச வேகம் அதிகமாகி உங்களை வேதனைக்கு உள்ளாக்குகிறது. தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் நீசமடைகிறார். வாழ்க்கையிலும் தொழில் துறையிலும் நித்தியகண்டம், பூரண ஆயுசாக நாள் ஓடுகிறது. ராசிநாதன் சுக்கிரன் உச்ச ராசியில் இருந்தும் 6-ல் மறைவு என்பதால் கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது போல, யார் வீட்டுப் பணத்தையோ புரட்டி உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வீர்கள். (பணம் அல்லது சரக்கு) ஏதோ ஒன்று உங்கள் ரொட்டேஷன்னுக்குப் பயன்படும். 6-க்குடைய குரு 5-ல் நின்று ராசியைப் பார்ப்பதால் தெய்வ நம்பிக்கையாலும் பிரார்த்தனை வழிபாடுகளினாலும் உங்கள் வாழ்நாள் வீண் நாளாக மாறாமல் ஏதோ இயங்குகிறது. குரு 9-ஆம் இடத்தைப் பார்க்கும் பலனும் ராசியைப் பார்க்கும் பலனும் அதுதான்.
 

 
 விருச்சிகம் (விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)
 
விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 2009 ஒக்டோபர் முதல் ஆறு மாத காலம் நீச ராசியில் இருக்கிறார். கடகத்தில் இன்னும் இரண்டு மாதம் இருப்பார். செவ்வாய் நீச ராசிக்கு வந்த நாள் முதல் அடுக்கடுக்கான பிரச்சினைகளும் கௌரவப் போராட்டங்களும் குடும்பத்தில் குழப்பங்களும் மனைவி, மக்கள் வகையில் சஞ்சலமும் தேக ஆரோக்கியக் குறைவும் ஆபரேஷன் போன்ற மேஜர் வைத்தியச் செலவுகளும் என எல்லாத் துன்பங்களையும் தொடர் கதையாகச் சந்தித்து சந்தித்து நொந்து போய் விட்டீர்கள். செவ்வாய் மிதுனத்தில் இருக்கும் காலத்திலும் சனி, செவ்வாய் பார்வை சம்பந்தம் கிடைத்த காலத்திலும் உங்களுக்கு துன்பச் சுமை தாங்க முடியாத சுமையாக அமைந்தது. மகர குரு செவ்வாயைப் பார்த்த காலத்திலும் அடுத்த இப்போது கும்ப குருவை செவ்வாய் பார்க்கும் காலத்திலும் உள்ளுக்குள் சந்தோஷம், நிம்மதி, மன நிறைவு இல்லை என்றாலும் வெளி உலகத்தில் மதிப்பு, மரியாதை, கௌரவம் ஆகியவற்றுக்கு குறைகள் வராமல் காப்பாற்றப்படுகிறது. இந்த வாரக் கடைசியில் குரு அஸ்தமனம் நீங்கி உதயமாகிறார். அதன் பிறகு பொருளாதார நிலையில் நல்ல திருப்பமும் சேமிப்பும் எதிர்பார்க்கலாம். அதுவரை ஆயிரம் வந்தால் இரண்டாயிரம் செலவு வரும்.
 

 

 
 தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)
 
தனுசு ராசிநாதன் குரு சனியின் வீட்டில் கும்பத்தில் மறைகிறார். குருவுக்கு சாரம் கொடுத்த ராகு ஜென்ம ராசியில் நிற்பதாலும், குருவுக்கு வீடு கொடுத்த சனி குருவுக்கு 8-ல் மறைந்தாலும் 10-ல் நிற்பதாலும் வாழ்க்கை தொழில் அமைப்பில் செயல் பாதிப்பு, தேக்கம் இல்லை. ஏக்கம் இருக்கலாம்; தேக்கம் இருக்காது. மேலும் இந்த வாரக் கடைசியில் (22-3-2010) குரு அஸ்தமனம் நீங்கி உதயமாவதும் வார மத்தியில் குரு பூரட்டாதியில் சுய சாரம் பெறுவதும் ஒரு நல்ல திருப்பமாகும். அதனால் உங்கள் எதிர்காலத் திட்டங்கள் வெற்றி பெறும்; முன்னேற்றகரமான திருப்பங்கள் ஏற்படும் என்ற நம்பிக்கை உதயமாகும். உத்தியோகத்துறையில் முன்னேற்றகரமான மாறுதல்களையும் எதிர்பார்க்கலாம். தொழில் துறையில் வளர்ச்சியை எதிர்பார்க்கலாம். ஜென்ம ராகுவும் சப்தம கேதுவும் எதிர்காலத்தைப் பற்றிய கவலையையும் பயத்தையும் ஏற்படுத்தினாலும் 7, 9, 11-ஆம் இடங்களுக்கு குரு பார்வை கிடைப்பதால் எந்தப் பாதகமும் வராது. கேடு கெடுதியும் அணுகாது. குருவின் அஸ்தமனம் முடிந்த பிறகு குருவின் உதயம் அவர் நிற்கும் இடம், பார்க்கும் இடங்களுக்கு அற்புதப் பலன்களை உண்டாக்கித் தரும்.
 

 
 மகரம் (உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)
 
மகர ராசிநாதன் சனி பாக்கிய ஸ்தானத்தில் இருந்தாலும் ஜனவரி- 10 முதல் வக்ரமாக இருப்பதால் சில காரியத் தடைகளும் தாமதங்களும் ஏற்படுகிறது. பொதுவாக சனியின் வக்ரம் உக்ர பலம் என்றாலும் அட்டமாதிபதியான சூரியன் நட்சத்திரத்தில் சனி சஞ்சரிப்பதால் தாமதத்தை நினைத்து- தடைகளை நினைத்து மன வெறுப்புக்கும் விரக்திக்கும் ஆளாவீர்கள். என்றாலும் சனி நவாம்சத்தில் கும்பத்தில் ஆட்சி பெறுவதால் நடப்பதும் நடக்க வேண்டியதும் நல்லபடியாக நடக்கும் என்று மனத்தளவில் ஆறுதல் அடைவீர்கள். 2-ஆம் இடத்து குரு வாரக் கடைசியில் அஸ்தமனம் நீங்கி உதயம் ஆவதால் பணக் கஷ்டமும் நீங்கி தாராளமான வரவு- செலவுகளைச் செயல்படுத்தலாம். 4, 11-க்குடைய செவ்வாய் நீசமடைந்து ராசியைப் பார்ப்பதால் சில நேரங்களில் ஆரோக்கியக் குறைவையும் சந்திக்க நேரும். என்றாலும் 5, 10-க்குடைய சுக்கிரன் உச்சபலமாக இருப்பதால் செயலளவில் அடிப்படை வாழ்க்கை வசதி, சௌகர்யங்களில் குறைவிற்கு இடமில்லை. என்றாலும் 3-ல் மறைவு என்பதால் நிறைவிற்கும் இடமில்லை. காலமும் நேரமும் துடுப்பில்லாத படகு போல காற்றடிக்கும் பக்கம் பயணம் போகும்.
 

 

 

  கும்பம் (அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)
 
கும்ப ராசிக்காரர்களுக்கு அட்டமத்துச்சனி நடக்கிறது. சனி பெயர்ச்சியாகி ஆறு மாதங்கள் தான் ஆகிறது என்றாலும் சனி தற்போது வக்ரம் என்பதால் வக்ரத்தில் உக்ர பலம். மனத்தளவிலே திருப்தியும் முன்னேற்றமும் இல்லாமல் எல்லாம் கிணற்றில் போட்ட கல்லைப்போல அசைவற்றுக் கிடக்கும். ஆற்றில் கிடக்கும் கல் வேகமான வெள்ளப் பெருக்கில் அடித்துச் செல்லப்படும். ஆனால் கிணற்றில் கிடக்கும் கல் அசைவற்றுக் கிடக்கும். சிலருக்கு சனியின் வக்ரம் இடப் பெயர்ச்சியையும் வேலைவாய்ப்பையும் வருமானத்தையும் ஏற்படுத்தி இருக்கலாம். இருந்தாலும் 10-க்குடைய செவ்வாய் 6-ல் நீசமாக இருப்பதால் நினைப்பது ஒன்று, நிகழ்வது ஒன்றாக முடியும். ஒன்று நினைக்கில் அது ஒழிந்து மற்றொன்றாகும்; அன்றி அது வரினும் வந்தெய்தும்; ஒன்றும் நினையாமல் இன்னொன்று நிற்கும்; எனையாளும் ஈசன் செயல் என்று ஒரு பாடல் உண்டு. அது உங்களுக்கே பொருத்தமான பாடலாக அமையும். எதிர்காலத்தைப் பற்றிய கனவுகளும் திட்டங்களும் அற்புதமாகத் தெரிந்தாலும் அதற்கான முயற்சிகளும் மிகத் தீவிரமாக அமைந்தாலும் எது வருகிறதோ அதை முழு மனதோடு ஏற்றுக் கொள்ளுங்கள். இன்று காயாகத் தெரியும் காரியங்கள் அனைத்தும் நாளை பழுத்துக் கனியாகி இருக்கும்.
 

 

 
 மீனம் (பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி முடிய)
 
மீன ராசிநாதன் குரு ராசிக்கு 12-ல் மறைந்திருக்கிறார். வாரத் தொடக்கத்தில் ராகுவின் சாரத்தில் இருக்கும் குரு அடுத்து பூரட்டாதி 1-ல் சுயசாரம் பெறுகிறார். குரு 10-க்குடையவர். அவரை 9-க்குடைய செவ்வாய் 5-ல் நீசபங்கம் பெற்றுப் பார்க்கிறார். அதனால் தர்மகர்மாதிபதி யோகம் ஏற்படுகிறது. செவ்வாய் பூச நட்சத்திரத்தில் இருக்கிறார். பூசம் சனியின் நட்சத்திரம். சனி செவ்வாய்க்கு உச்ச ராசிநாதன். அதனால் செவ்வாய்க்கு நீசபங்கம் ஏற்படுகிறது. எனவே உங்களுக்கு அடுத்தடுத்து பிரச்சினைகள் வந்து கொண்டே இருந்தாலும் அவற்றை எல்லாம் சந்தித்து சமாளிக்கும் வல்லமையும் ஏற்படுகிறது. 6-க்குடைய சூரியன் ஜென்ம ராசியில் நின்று சனியின் பார்வையைப் பெறுகிறார். சனி சூரியன் நட்சத்திரத்தில் புதன் வீட்டில் நின்று, மீனத்தில் நிற்கும் சூரியன், புதனையும் பார்க்கிறார். எனவே, செலவுகள் படையெடுத்து வந்து வாசல் கதவைத் தட்டினாலும் வரவுகளும் எதிர்பாராமல் வந்து தாக்குப்பிடித்து காத்து நிற்கும். மலை போல வரும் பிரச்சினைகள் எல்லாம் பனி போல விலகிவிடும். புதனும் சுக்கிரனும் ஜென்ம ராசியில் நீசம். உச்சம் என்றாலும் புதனுக்கு நீசபங்கம் என்பதால் கௌரவம் பாதிக்காது. செயல்கள் பாதிக்காது. 4-ல் கேது, 10-ல் ராகு கேதுவுக்கு சனியின் பார்வை பிரச்சினைகளை உருவாக்கினாலும் குருவும் கேதுவைப் பார்ப்பதால் தோஷம் நிவர்த்தியாகிறது.
 

 
   

வார ராசிபலன் 02-March-2010 முதல் 08-March 2010

மேஷம் (அசுவினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
மேஷ ராசிநாதன் செவ்வாய் சனியின் சாரத்தில் வக்ரம் பெற்று நீச ராசியில் நீசபங்கமாகவும் இருப்பதால் உங்களுடைய செயலில் அல்லது முயற்சியில் தடை, தாமதம் ஏற்பட்டாலும் தோல்விக்கு இடமில்லை. சில காரியங்களில் லேட்டானாலும் லேட்டஸ்டாக சாதித்து விடலாம். செவ்வாய் 7-ஆம் இடம், 10-ஆம் இடம், 11-ஆம் இடங்களைப் பார்க்கிறார். செவ்வாய் நின்ற இடம் 4-ஆம் இடம். இதில் செவ்வாய் ராசியாதிபதி என்பதால், இந்த இடங்களில் சில அசுப பலன்களைக் கொடுத்து பிறகு சுபப் பலன்களாக மாற்றிவிடும். செவ்வாய் நீசம், வக்ரம் என்பதால் ஆரம்பத்தில் அசுப பலன்களைச் சந்தித்து பிறகு நீசபங்கம் என்பதாலும் வக்ரத்தில் உக்ர பலம் என்பதாலும் சுபப் பலன்களாக மாற்றிவிடும். அதை உதாரணத்தோடு சொல்லுவதென்றால், அரசு புறம்போக்கு இடத்தில் குடிசை போட்டு வருடக்கணக்கில் குடியிருக்கிறவர்களைக் காலி செய்வது அசுப பலன். அவர்கள் மறியல் செய்து போராட்டம் நடத்தியதும் அவர்களுக்கு மாற்று இடம் ஒதுக்கி அரசு வீடு கட்டித் தருவது சுபப் பலன். இப்படி பூமி, வீடு, வாகனம், கல்வி, தாய், சுகம் ஆகிய 4-ஆம் பாவகப் பலனில் ஆரம்பத்தில் சில பிரச்சினைகளைச் சந்தித்து பிறகு நற்பலன்களாக மாறும். அதேபோல 7- திருமணத்தடை விலகும். கணவன்- மனைவிக்குள் அடிப்படை கருத்து வேறுபாடுகளை உருவாக்கி, பிறகு விட்டுக் கொடுத்து அனுசரித்துப் போகும் நிலை ஏற்படும். தொழில் துறையிலும் எதிர்பாராத சங்கடங்களைச் சந்தித்து, பிறகு அதை நிவர்த்தி செய்து லாபமும் முன்னேற்றமும் வெற்றியும் உண்டாகும். 11-ஆம் இடம் மூத்த சகோதரம். அதற்கு சகோதர காரகன் செவ்வாய் 6-ல் இருப்பதால் மூத்த உடன்பிறப்புக்கள் வகையில் சில தர்ம சங்கடங்களைச் சந்தித்து நிவர்த்தியாகும்.

ரிஷபம் (கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய) ரிஷப ராசிநாதன் சுக்கிரன் வாரத் தொடக்கத்தில் 10-ல் இருந்து, பிறகு 3-ஆம் தேதி முதல் 11-ல் மீனத்தில் உச்சம் அடைகிறார். எனவே செல்வாக்கு, கீர்த்தி, திறமை, செயல்பாடு ஆகிய 1-ஆம் பாவம் சம்பந்தப்பட்ட நற்பலன்களை அடையலாம். பாராட்டும் பரிசுகளும் பெறலாம். யானை படுத்தாலும் குதிரை மட்டம் என்ற மாதிரி பெருமைக்கு குறைவு ஏற்படாது. அதேசமயம் சுக்கிரன் 6-க்கும் உடையவர். அவர் உச்சம் பெறுவதால் போட்டி, பொறாமை, எதிர்ப்பு, இடையூறுகளும் உச்சமாகவே அமையும். ஆனாலும் அவற்றினால் உங்களுக்கு பாதிப்போ தோல்வியோ வராத வண்ணம், 11-ஆம் இடத்தைப் பார்க்கும் சனியும், 11-க்குடைய குரு 10-ல் இருப்பதாலும் வெற்றிக்கு இடமுண்டு. பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது என்பது போல எதிரிகளை உதிரிகளாக்கி விட்டு முன்னேற்றப் பாதையில் செயல்பட்டு வெற்றி பெறலாம்; சாதித்துக் காட்டலாம். சுக்கிரன் 11-ஆம் இடத்துக்குரிய குருவின் சாரத்திலும் 11-ஆம் இடத்தைப் பார்க்கும் சனியின் சாரத்திலும் சஞ்சரிப்பதால் லாபமும் வெற்றியும் முன்னேற்றமும் தடையில்லாமல் வந்து சேரும். 3-ஆம் இடம் தைரிய ஸ்தானம். அங்கு செவ்வாய் நீசபங்கமாகவும் வக்ரமாகவும் இருப்பதால் தன்னம்பிக்கையும் தைரியமும் குறையாமல் விளங்கும். ஒரு சிலருக்கு உடன்பிறப்புகள் வகையில் வெளியில் கூற முடியாதபடி சில சங்கட உணர்வுகளைச் சந்திக்க வைத்தாலும், ராசிநாதன் உச்ச பலத்தால் அவற்றை சாமர்த்தியமாகக் கையாண்டு சமாளித்துவிடலாம். 2-ல் கேது, 8-ல் ராகு என்பதால் பங்குச் சந்தை, ஸ்பெகுலேஷன் அல்லது எதிர்பாராத தனப்ராப்திகளும் உண்டாகும்.

மிதுனம் (மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய) மிதுன ராசிநாதன் புதன் வார தொடக்கத்தில் 9-ல் இருக்கிறார். ராகு சாரத்தில் நிற்கும் புதன் 7, 10-க்குடைய குருவின் சாரத்தில் மாறுவார். வாரக் கடைசியில் மீனத்தில் நீசம் அடைவார். என்றாலும் ராசிக்கு 10-ல் கேந்திரம் என்பதாலும் உச்சம் பெற்ற சுக்கிரனோடு சேர்வதாலும் புதனுக்கு நீசபங்க ராஜயோகம் ஏற்படும். வேலை இல்லாமல் வீண்பொழுதாக நாளைக் கழித்தவர்களுக்கு நல்ல வேலை அமையும். அர்த்தாஷ்டமச் சனி (4-ஆம் இடம்) பலனாக கடந்த காலத்தில் ஏற்பட்ட ஏமாற்றம், இழப்பு, நஷ்டங்களுக்கு ஈடு செய்யும் வகையில் புதிய தொழில் அமைப்புகளை உருவாக்கலாம். ஜென்ம கேதுவும் சப்தம ராகுவும் குடும்பத்தினரோ அல்லது உடனிருப்பவர்களோ உங்கள் திட்டங்களின் பெருமைகளை உணராமல் உங்கள் வேகத்தைத் தடைப்படுத்தலாம் அல்லது எதிர்மறையாகப் பேசலாம். அவற்றையெல்லாம் முக்கியமானதாக எடுத்துக் கொள்ளாமல் ஒதுக்கித் தள்ளிவிட்டு உங்கள் மனம் ஆணையிடும் வகையில் நம்பிக்கையோடு செயல்படுவதற்கு 9-ல் நின்று பார்க்கும் குருவும் 9-க்குடைய சனியின் பார்வையும் துணை புரியும். அதைவிட சிறப்பு- 10-க்குடைய குரு 9-ல் நிற்க, 9-க்குடைய சனி 10-ஆம் இடத்தைப் பார்ப்பது தர்மகர்மாதிபதி யோகம். ஆகவே அது உங்களை வழிநடத்தும். இராவணனின் அசோகவனத்தில் சீதை சிறை வைக்கப்பட்டாலும், கற்புக்கு எந்தக் களங்கமும் வராத வகையில் காப்பாற்றப்பட்டது போல தர்மகர்மாதிபதி யோகம் உங்களைக் காப்பாற்றும்.

கடகம் (புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய) கடக ராசிக்கு ஏழரைச்சனி விலகியும் இன்னும் சரியான முறையில் வருமானம், தொழில் அமையவில்லையே என்ற கவலை சிலருக்கு. வருமானம், தொழில் எல்லாம் முறையாக இருந்தும் உயர்வுக்கு வழியில்லாமல் கிணற்றில் போட்ட கல்லைப் போல அசைவற்று அப்படியே இருக்கிறதே என்ற ஆதங்கம் சிலருக்கு. பதவி கிடைத்தாலும் அல்லது பதவி உயர்வு பெற்றாலும் விரும்பிய இலாகா அல்லது விரும்பிய இடப்பெயர்ச்சி இல்லையே என்ற விரக்தி சிலருக்கு. இதற்கு இரண்டு காரணங்கள். 10-க்குடைய செவ்வாய் வக்ரம், நீசம் என்பது ஒரு காரணம். பாக்கியாதிபதி குரு 8-ல் மறைவு. அஸ்தமனம் என்பது இன்னொரு காரணம். மார்ச் 13-ஆம் தேதி செவ்வாய் வக்ர நிவர்த்தி அடைகிறார். மார்ச் 22-ல் குரு அஸ்தமனம் நீங்கி உதயமாவார். குருப்பெயர்ச்சி மே 2-ல் என்றாலும் குரு உதயமானதற்குப் பிறகு ஓரளவு குருவால் ஏற்படும் கெடுபலன்கள் குறையும் என்று எதிர்பார்க்கலாம். அதன்பிறகு உங்கள் வாழ்வில் முன்னேற்றம் ஜெட் வேகத்தில் செயல்படும். ஏழரையாண்டு சனியின் தொல்லைகளைச் சந்தித்துப் போராடியவர்களுக்கு சில நாட்கள் பொறுமையாக இருக்க முடியாதா! குரு 8-ல் மறைந்திருந்தாலும் 12-ஆம் இடம், 2-ஆம் இடம், 4-ஆம் இடங்களைப் பார்ப்பதால், செலவு செய்வதற்காகவே வரவும் வந்து சேரும். 4-ஆம் இடத்துச் சுக்கிரன் லாபாதிபதியாகி மார்ச் 3-ல் 9-ல் உச்சம் பெறும்போதே தடைகள் விலகும். வழிகள் பிறக்கும்.

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய) சிம்ம ராசிநாதன் சூரியன் ராகு சாரத்திலும் பிறகு குரு சாரத்திலும் சஞ்சாரம். சூரியனுக்கு ராகு பகை கிரகம். ராகு 5-ல் நிற்கிறார். அதனால் உங்கள் எண்ணங்களிலும் திட்டங்களிலும் வெற்றி வாய்ப்புகள் கடைசி நேரத்தில் கைநழுவிப் போகிறது. பரிசுச் சீட்டில் முதல் பரிசிற்கு ஐந்து நம்பர் உங்கள் கையிலிருக்கும் சீட்டை ஒட்டியே வந்து, ஆறாவது நம்பர் கடைசி நம்பர் வேறு நம்பர் ஆகிவிட்டால் எப்படி ஏமாற்றம் ஆகிறதோ அப்படி உங்கள் திட்டங்களும் எண்ணங்களும் ஏமாற்றம் ஆகிறது. அதற்கு செவ்வாயும் சனியும் ஒரு காரணம்- செவ்வாய் 12-லும் சனி 2-லும் இருப்பதும்தான். என்றாலும் 5-க்குடைய குரு ராசியைப் பார்ப்பதோடு ராசிநாதன் சூரியனோடு சேர்ந்திருப்பதால் எல்லா சிக்கல்களையும் கடந்து சமாளிக்கலாம். ஆனால் மனம் மட்டும் ஏதாவது ஒரு வகையில் நிம்மதி இல்லாமல் அலைபாய்ந்து கொண்டே இருக்கும். அதற்குக் காரணம் 5-ல் நிற்கும் ராகுதான். அவரை சாந்தப்படுத்த வடக்குப் பார்த்த காளியை வணங்கலாம்.


கன்னி (உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய) கன்னி ராசிநாதன் புதன் தொடக்கத்தில் ராகு சாரத்திலும் பிறகு குரு சாரத்திலும் சஞ்சரிக்கிறார். ஜென்ம ராசியில் சனி நிற்கிறார். அதனால் ஏழரைச்சனியில் ஜென்மச்சனி. குரு 6-ல் அஸ்தமனம்- மறைவு. ஆகவே தொழில் இயங்கினாலும் சம்பாத்தியம் அவ்வப்போது இருந்தாலும் எல்லாவற்றிலும் எதிர்பார்க்கும் நிறைவு இல்லாமல் தவிப்பீர்கள். விரக்தி, அலைச்சல், டென்ஷன் அதிகமாகும். கடனை வாங்கித் தொழிலை நடத்தி, வெளியில் கடனைக் கொடுத்து குறித்த காலத்தில் பணம் வசூல் ஆகாமல், வாங்கிய பணத்தை நாணயத்தைக் காப்பாற்ற வட்டிக்கு வாங்கித் தர வேண்டி இருக்கும். ஏற்கெனவே மீள முடியாத கடன் என்னும் கடல் ஆழத்தில் தவிப்பவர்களுக்கு மேலும் புதுக்கடன் எனும் அலை வந்து மோத தப்பிக்கத் திணறுவீர்கள். இந்தத் துன்பம் எல்லாம் நிரந்தரமல்ல- தற்காலிகமானவைதான் என்றாலும், 4-ஆம் இடத்து ராகுவும் 10-ஆம் இடத்துக் கேதுவும் உங்கள் சுகத்தையும் கெடுத்து தொழில்துறையில் பயத்தையும் கொடுக்கும். மார்ச் 3-ல் 2, 9-க்குடைய சுக்கிரன் 7-ல் உச்சம் பெறுவார். மார்ச் 8-ல் அவரோடு புதனும் போய்ச் சேருவார். அதன்பிறகு சில நல்ல திருப்பங்கள் உண்டாகும். குருவின் மறைவு தோஷம் விலக இறைவழிபாடும் ஹோமங்களும் செய்து கொள்வது அவசியம்.

துலாம் (சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய) துலா ராசிக்கு ஏழரைச்சனி ஆரம்பம். சனி ஆரம்பித்து ஆறு மாதங்கள் ஆனாலும் சனியின் பாதிப்பைவிட செவ்வாய் கடகத்தில் நீசமான பிறகுதான் தொழில் கவலையும் தேவையில்லாத இடப்பெயர்ச்சியும் காரண காரியமில்லாத கற்பனை பயமும் உங்களைச் சூழ்கிறது. நேர்மையான அதிகாரிகள் சிலர்மீது, அவரால் நன்மையும் பயனும் அடைந்தவர்களே மேலிடத்தில் இல்லாததும் பொல்லாததும் சொல்லி சிக்கலை உண்டு பண்ணுவார்கள். அதன் காரணமாக மூன்று மாதம், ஆறு மாதத்திற்குள் டிரான்ஸ்பர்களையும் சந்திப்பார்கள். இவையெல்லாம் 10-ஆம் இடத்து செவ்வாயின் பலனாகும். அதற்காகக் கவலைப்படாதீர்கள். ஆட்டு மந்தையில் ஒரு கருப்பு ஆடு உங்களை வெறுப்பேற்றுகிறது. அது எந்த ஆடு என்று அடையாளம் தெரியவில்லை. மார்ச் 13-ல் செவ்வாய் வக்ர நிவர்த்தி ஆனதும் மறைமுகமாக முதுகில் குத்தியவரை அடையாளம் காணலாம். ஒரு சிலருக்கு மார்ச்சில் ஒப்பந்த வேலை முடிவு பெற்ற பிறகு ஏப்ரலில் என்ன செய்வது என்ற கவலையும் குழப்பமும் உருவாகலாம். குரு ஜென்ம ராசியைப் பார்ப்பதால் மீண்டும் ஒப்பந்தம் புதுப்பிக்கப்படலாம். தொடர்ந்து பணியாற்றும் யோகம் ஏற்படலாம். சனி 12-ல் இருக்கும் வரை பெரும் மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது.

விருச்சிகம் (விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய) விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 9-ல் நீசம், நீசபங்கம், வக்ரம். விருச்சிக ராசிக்கு சனியின் பார்வை. 2-ல் ராகு, 8-ல் கேது. இவை எல்லாம் உங்களுடைய சந்தோஷத்தை மூடி கதவடைக்கிறது. குடும்பத்தில் அவ்வப்போது சிறுசிறு பிரச்சினைகள் தோன்றி மறையும். தாராளமான பணப்புழக்கம் இருந்தாலும் சேமிப்புக்கு இடமில்லாத வகையில் பண விரயம் ஏற்படும். வரவேண்டிய பாக்கி சாக்கிகள் வசூல் ஆகாமல் டென்ஷன் ஆகும். கொடுத்த பணத்தைக் கேட்டால் பகை உருவாகும்; வருத்தம் உருவாகும். அதற்காகக் கொடுத்த பணத்தைக் கேட்காமலும் இருக்க முடியாது. கேட்காத பணமும் பார்க்காத தொழிலும் கெட்டுப் போகும் என்பது பழமொழி. வெளியில் மதிப்பும் மரியாதையும் இருந்தாலும் வீட்டுக்குள் கௌரவ பாதிப்புக்களைச் சந்திக்க வேண்டும். இவையெல்லாம் மார்ச் 13 வரை- செவ்வாயின் வக்ர காலம் முடியும் வரை சமாளிக்க வேண்டும். அதன்பிறகு இந்தச் சூழ்நிலை மாறும். செவ்வாய் நீசம் தெளிவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் இருந்தாலும் வக்ர நிவர்த்திக்குப் பிறகு உங்களுக்கு அனுகூலமான திருப்பங்களை எதிர்பார்க்கலாம். இக்காலம் முடியும் வரை குடும்பத்திலும் வெளியிலும் மௌனத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. மௌனம் கலக நாஸ்தி. தசாபுக்திகள் பாதகமாக இருந்தால் உடல்நலம் பாதிக்கப்படலாம். அதற்குரிய பரிகாரங்களைத் தேடிக்கொள்ளவும்.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய தனுசு ராசிநாதன் குரு அஸ்தமனமாக இருக்கிறார். (பிப்ரவரி 20 முதல் மார்ச் 22 வரை.) அவர் 1, 4-க்குடையவர். அவருக்கு சாரம் கொடுத்த ராகு ஜென்மத்தில் இருப்பதால், அடிப்படை கௌரவ பாதிப்புகளோ சௌகரியக் குறைவுகளோ ஏற்படாது என்றாலும் மன சலனமும் எதிர்காலத்தைப் பற்றிய கவலையும் சிலருக்கு இருக்கலாம். குரு 4-க்குடையவர் என்பதால் சிலருக்கு தேக ஆரோக்கியத்தைப் பற்றிய கவலையும், சிலருக்கு சௌகரியமான வீடு அமையவில்லையே என்ற கவலையும், சிலருக்கு கட்டிட வேலையைப் பூர்த்தி பண்ண முடியவில்லையே என்ற கவலையும் ஏற்படும். வாகனங்கள் வைத்திருப்போருக்கு தவிர்க்க முடியாத செலவுகள் ஏற்படலாம். அல்லது வாகனப் பரிவர்த்தனை ஏற்படலாம். குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகளும் முன்னேற்றத்திற்குரிய அமைப்புகளும் தாமதப்பட்டாலும் எல்லாம் நன்மைக்கே என்று ஆறுதல் அடையுங்கள். குரு பலம் பெறும்போது எல்லாம் நீங்கள் நினைத்ததற்கு மேல் வளமாக நலமாக நடந்தேறும். குரு பார்வை 7-ஆம் இடம், 9-ஆம் இடம், 11-ஆம் இடங்களுக்குக் கிடைப்பதால் குடும்பத்தில் ஆனந்தமும் அமைதியும் நிலவும். தெய்வ வழிபாடுகளும் பிரார்த்தனைகளும் நிறைவேறும். பணப் பற்றாக்குறை இல்லாமல் வரவு- செலவு ஓடியடையும்.

மகரம் (உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய) மகர ராசிநாதன் சனி 9-ல் இருப்பதால் உங்களுக்கு தெய்வ அனுகூலம் அதிகமாக இருக்கும். சனிக்கு வீடு கொடுத்த புதன் ஜென்ம ராசிக்கு 2-ல் பரிவர்த்தனையாக இருப்பதால் சனி- புதன் பரிவர்த்தனை யோகம் பெறுகிறார்கள். அதனால் தாராளமான வரவு- செலவுகளும் தடையில்லாத பணப் புழக்கமும் இருக்கும். 7-ல் செவ்வாய் நீசமாக இருந்தாலும் களஸ்திர காரகன் சுக்கிரன் 3-ஆம் தேதி மீனத்தில் உச்சம் பெறுவதால் கணவன்- மனைவிக்குள் பரஸ்பரம் அந்நியோன்யம் நிலவும். முரண்பட்ட கருத்துகள் மாறி அனுசரிப்புத் தன்மை உண்டாகும். சிலரின் மனைவிக்குத் தொழில் யோகமும் உத்தியோக வாய்ப்பும் உருவாகலாம். உங்களுக்கும் தொழில் வளமும் மேன்மையும் புதிய திட்டங்களும் உருவாகும். அரசு உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு டென்ஷன் அதிகமாகும். எவ்வளவு விசுவாசமாகவும் உண்மையாகவும் பாடுபட்டாலும் பாராட்டு எதிர்பார்க்க முடியாது. பாராட்டும் பரிசும் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை; பழி சொல்லாமல் இருந்தால் போதும் என்று ஆறுதல் அடையுங்கள். ஜாதக தசாபுக்திகள் சாதகமாக இல்லாவிட்டால் சகோதர வகையில் ஒரு சிலர் சங்கடங்களைச் சந்திக்க நேரும். குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை; நீரடித்து நீர் விலகாது என்ற பாலிசியைக் கடைபிடிக்கவும்.


கும்பம் (அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய) கும்ப ராசிநாதன் சனி 8-ல் மறைந்திருக்கிறார். சனிக்கு சாரம் கொடுத்த சூரியனும் வீடு கொடுத்த புதனும் ஜென்மத்தில் இருந்தாலும் அவர்களுக்குள் 6, 8-ஆக இருப்பதால், உங்களுக்கு யாரும் விரோதிகள் இல்லை என்றாலும் உங்களை மற்றவர்கள் விரோதக் கண்ணோட்டத்தோடே பார்ப்பார்கள். எப்போதும் உண்மையாகவும் எதார்த்தமாகவும் நீங்கள் நடந்து கொண்டாலும் மற்றவர்களுக்குக் குற்றமாகவே தெரியும். உள்ளதை சொன்னால் பொல்லாப்பு வரத்தானே செய்யும். இது கும்ப ராசிக்கே பொதுவான விதி என்றாலும், இப்போது அட்டமத்துச்சனி காலத்தில் அது முக்கியத்துவம் ஆகிவிடும்; உங்களை அதிகம் கவலைப்பட வைக்கும். செவ்வாய் சகோதர காரகன் 6-ல் மறைந்த வக்ரமாகி நீசப்படுவதால், உடன் பிறந்தவர்கள் வகையில் உங்கள் பரந்த மனப்பான்மையைப் புரிந்துகொள்ளாமல் உங்களை நோகடிப்பார்கள். மார்ச் 3-ஆம் தேதி சுக்கிரன் 2-ல் உச்சமானதும், ராசிநாதன் சனியின் பார்வையைப் பெறும் காலம் பொருளாதார நெருக்கடி நிலை மாறும். தாராளமான வரவு- செலவும் பணப் புழக்கமும் உண்டாகும். புதியவர்கள் அறிமுகமும் அவர்களால் உதவியும் எதிர்பார்க்கலாம்.


மீனம் (பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி முடிய) மீன ராசிநாதன் குரு 12-ல் மறைந்திருப்பது ஒரு வகையில் பலக்குறைவு தான். எடுத்த வேலைகளைத் தொடுத்து முடிக்கவும் வேகமாக விரைந்து நிறைவேற்றவும் விரும்பலாம். ஆனால் நேரம் காலம் ஒத்துழைக்காமல் தடை, தாமதம் ஏற்படும். 2, 9-க்குடைய செவ்வாய் நீச ராசியில் வக்ரப்பட, சனி ஜென்ம ராசியைப் பார்க்க, ராசிநாதன் குருவும் 12-ல் மறைந்து சனி- குரு, செவ்வாய்- குரு என 6, 8-ஆக அமர்ந்திருப்பதால் அன்புத் தொல்லைகள் அதிகமாகும். வீண் விமர்சனமும் காரியத்தடைகளும் தேவையற்ற விரயங்களும் திடீர் பயணங்களும் உண்டாகி உங்களுக்கு சந்தோஷக் குறைவை ஏற்படுத்தும். குடும்பத்தில் நடைபெற வேண்டிய நல்ல நிகழ்ச்சிகள் எல்லாம் தள்ளிப் போவது மன வருத்தத்தை உண்டாக்கும். 4-ஆம் இடத்துக் கேதுவும் அவரைப் பார்க்கும் சனியும் ஆரோக்கியக் குறைவையும் அதனால் மனச் சங்கடத்தையும் உருவாக்கும். என்றாலும் 2-ல் சுக்கிரன் 3-ஆம் தேதி உச்சம் பெறும்போது பொருளாதார நிறைவும் தேவையான அளவு காரியங்கள் நிறைவேறப் பணப் புழக்கமும் கிடைப்பதால் மற்ற கவலைகளை மறந்து ஆறுதல் அடையலாம். 7-ல் சனி இருந்தாலும் அவருக்கு வீடு கொடுத்த புதனும் சாரம் கொடுத்த சூரியனும் கும்பத்தில் பரிவர்த்தனை பெறுவதால், எந்த பாதிப்பும் இல்லாமல் மனைவி, குடும்பம், மக்கள் வகையில் நற்பலன்கள் உண்டாகும்; துர்பலன்களுக்கு இடமில்லை.
   

இந்த வார ராசி பலன்

23-02-10 தொடக்கம் 01-03-10 வரை

மேஷம் (அசுவினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய) மேஷ ராசிநாதன் செவ்வாய் கடகத்தில் நீச ராசியில் நின்றாலும் அது 4-ஆம் இடம் ராசிக்கு கேந்திரம் பெறுவதால் நீசபங்கம் ஆகிறது. செவ்வாய் மகரத்தில் உச்சம். மகரத்துக்கு அதிபதியான சனியின் நட்சத்திரத்தில் (பூச) செவ்வாய் நிற்பதாலும் நீசபங்கம் ஆவார். அத்துடன் வக்ரமாகவும் இருப்பதால் வக்ரத்தில் உக்ரபலம் என்பதால் மேஷத்துக்கும் விருச்சிகத்துக்கும் அதிபதியான செவ்வாய் அந்த பலனை கெடுக்க மாட்டார். ஆனால் 4-ல் நிற்பதால் நின்ற இடத்துப் பலனைக் கெடுப்பார். அதாவது தேக சுகம், தாய், படிப்பு, பூமி, வீடு, வாகனம் போன்ற 4-ஆம் வீட்டுப் பலனை நிர்ணயிக்கும்போது ஜாதக தசாபுக்தி பலன்களையும் இணைத்து நிர்ணயிக்க வேண்டும். ஆகவே சிலருக்கு தேக சுகத்தில் பிரச்சினை ஏற்படும். செவ்வாய் ரத்த காரகன். சனி நரம்பு காரகன். செவ்வாய் நிற்கும் வீடு சந்திரன் வீடு கடகம். மனோகாரகன் சளி, இருமல், தருமல் காரகன். ஆகவே இவை சம்பந்தப்பட்ட பிணி, பீடைகள் உங்களைத் தாக்கலாம். சிலருக்கு மனத்தளவிலே ஏதோ ஒரு குறை இருப்பதாக உணர்வீர்கள். செவ்வாய் 7-ஆம் இடத்தையும் 10-ஆம் இடத்தையும் 11-ஆம் இடத்தையும் பார்ப்பதால் மனைவி வகை உறவினர்களாலும் தொழில்துறையிலும் உங்களுக்கு ஏதோ குறையிருப்பதாகத் தோன்றலாம். உங்கள் கடமைகளைச் சரிவர செய்தாலும் அதற்குரிய பலாபலன் கிடைக்கவில்லையே என்ற ஆதங்கம் ஏற்படலாம். அல்லது கடமைகளைச் செய்ய முடியாதபடி ஒரு சோர்வு, அசதி, பிடிப்பின்மை காணலாம். படிக்கும் மாணவர்களுக்கு படிப்பில் மறதி, கற்பனை பயம், எதிர்காலம் பற்றிய கவலை, ஆர்வக்குறைச்சல் இருக்கலாம். தாயார் இருப்பவர்கள் தாயின் உறவில் வருத்தம் அல்லது தாய்க்குப் பீடை அல்லது தாயின் கோபத்துக்கு ஆளாகலாம். அதேபோல வாகன சம்பந்தமான தேவையற்ற செலவுகளும் விரயங்களும் உண்டாகும்.

ரிஷபம் (கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய) ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 10-ல் இருக்கிறார். வாரத் தொடக்கத்தில் ராகு சாரத்திலும் பிறகு குரு சாரத்திலும் சஞ்சரிக்கிறார். ராகு ராசிக்கு 8-ல் இருப்பதால் தொடக்கத்தில் உங்கள் காரியங்களில் தடை, தாமதம், கௌரவப் போராட்டம், மனக்கவலை ஆகிய பலன்களை சந்திக்க நேரும். பிறகு குரு சுக்கிரனோடு சேர்ந்திருப்பதால் தொழில் மேன்மை, வேலையில் நிம்மதி, வாழ்க்கையில் மகிழ்சி ஆகிய நற்பலன்களை எதிர்பார்க்கலாம். அதாவது ஒரு கிரகத்திற்கு சாரம் கொடுத்த கிரகமும், வீடு கொடுத்த கிரகமும் எங்கிருக்கிறார்களோ அந்த பலனைச் செய்வார்கள் என்பது விதி. சுக்கிரனுக்கு வீடு கொடுத்த சனி சுக்கிரனுக்கு 8-ல் மறைந்தாலும் ரிஷப ராசிக்கு 5-ல் இருப்பதால் பிள்ளைகள் வகையில் தொல்லைகளையும் அனுபவிக்க நேரும். சில சமயம் அவை அன்புத் தொல்லையாகவும் அமையும். உங்கள் எண்ணம், திட்டங்கள் ஈடேறும் என்றாலும், அதற்கு முன்னதாக கடுமையான போராட்டங்களையும் சமாளிக்க வேண்டியிருக்கும்.


மிதுனம் (மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய) மிதுன ராசிநாதன் புதன் 9-ல் திரிகோணத்தில் இருக்கிறார். ஆரம்பத்தில் செவ்வாயின் சாரத்திலும் பிறகு ராகுவின் சாரத்திலும் சஞ்சாரம். செவ்வாய் 2-ல் நீசம். ராகு 7-ல் பலம். புதனுக்கு வீடு கொடுத்த சனி, புதனுக்கு 8-ல் மறைந்திருந்தாலும் புதனும் சனியும் பரிவர்த்தனை யோகம் பெறுகிறார்கள். 7, 10-க்குடைய குரு புதனோடு சேர்ந்து ஜென்ம ராசியைப் பார்க்கிறார். எனவே, உங்கள் செல்வாக்கும் சொல்வாக்கும் சிறப்பாக இருக்கும். நீங்கள் செய்யும் முயற்சிகளும் காரியங்களும் மனைவியின் துணைவியோடு வெற்றி பெறும். திருமணமாகாதவர்களுக்கு நண்பர்களின் துணையோடு நல்லது நடக்கும். பொருளாதாரத்தில் ஏற்றம் இறக்கம் இருந்தாலும் நெருக்கடியோ, தட்டுப்பாடோ இருக்காது. தேவைக்கு பணம் புரளும். 10-க்குடைய குரு 9-ல் நிற்பதால் தர்மகர்மாதிபதி யோகமும் உங்களை வழிநடத்தும். வெளிநாட்டில் இருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும். திருமணயோகம் புத்திர ப்ராப்தி யோகம், வாகன யோகம், பூமி, வீடு, யோகம் அமையும்.

கடகம் (புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய) கடக ராசிநாதன் சந்திரன் வாரத் தொடக்கத்தில் உச்சகதியாகவும், பிறகு ஜென்ம ராசியை (ஆட்சி வீட்டை) நோக்கி பயணிக்கிறார். ஜென்ம ராசியில் செவ்வாய் நீசபங்க ராஜயோகம் அடைகிறார். எண்ணிய எண்ணங்கள் கைகூடும். திட்டங்கள் நிறைவேறும். புதிய தொழில் முயற்சிகள் செயல்படும். சூரியன், புதன், சுக்கிரன், குரு அனைவரும் 8-ல் மறைந்திருந்தாலும் ஜென்ம ராசியில் நிற்கும் செவ்வாய் அவர்களைப் பார்ப்பதால் மறைவு தோஷம் நிவர்த்தியாகிறது. அதனால் காரியங்களில் ஏமாற்றம், தோல்விக்கு இடம் இல்லை என்றாலும் தடை, தாமதங்களைச் சந்திக்க நேரும். 12-க்குடையவர் புதன் 8-ல் செவ்வாய் சாரம் பெறுவதால் வெளியூர் வேலைவாய்ப்பு முயற்சிகள் அல்லது வெளிநாட்டுப் பயணத் திட்டங்கள் கைகூடும். 2-க்குடைய சூரியனும், 9-க்குடைய குருவும், 11-க்குடைய சுக்கிரனும் 8-ல் ஒன்றுகூடி இருப்பதால் எதிர்பாராத தன லாபங்களும் தொழில் சம்பந்தமான அனுகூலமான திருப்பங்களும் எதிர்பார்க்கலாம்.

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய) சிம்ம ராசிநாதன் சூரியன் ராசிக்கு 7-ல் அமர்ந்து ராகு சாரம் பெற்று ராசியைப் பார்க்கிறார். பல நாட்களாக தடைபட்ட காரியங்களையும் தள்ளிப்போன நல்ல விஷயங்களையும் சாமர்த்தியமாக சாதிக்கும் காலம் இது. சந்தர்ப்பவாதியாக பழகிய சிலர் உங்களை விட்டுப் பிரிந்தாலும் விலகிப் போகாத விசுவாசமிக்கவர்களாய் உங்கள் செயல்களை முடித்துக் காட்டுவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்தலாம். வேலை உத்தியோகத்தில் புதிய பொறுப்புகளை ஏற்கலாம். புதிய கூட்டாளிகளின் ஒத்துழைப்போடு உபதொழில் முயற்சிகளில் தீவிரமாக இறங்கலாம். வெற்றியும் அடையலாம். 2-ல் சனி ஏழரைச்சனியாக நடப்பதால் சில நேரங்களில் குறுக்கீடுகளும் போட்டிகளும் எதிர்பட்டாலும் அவற்றைக் கண்டு துவளமாட்டீர்கள். இதுவரையிலும் காத்து வந்த பொறுமையும் விடாமுயற்சியும் வெற்றியடையும். பெருமை பெறும். வரவேண்டிய கடன்கள் வசூல் ஆவதற்கு சுணக்கம் ஏற்பட்டாலும் கொடுக்க வேண்டியவற்றை குறிப்பிட்ட காலத்தில் கொடுத்து முடித்து வாக்கு நாணயத்தைக் காப்பாற்றலாம்.

கன்னி (உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய) கன்னி ராசிக்கு ஜென்மச்சனி நடைபெறுகிறது. சனி 5, 6-க்குடையவர். அவர் ஜென்ம ராசியிலும், அந்த வீட்டுக்குடைய புதன் 6-ஆம் இடத்தில் சனியின் வீடு கும்பத்திலும் இருப்பதால் பரிவர்த்தனை யோகம். 6-என்பது போட்டி, பொறாமை, கடன், வைத்தியச் செலவு இவைகளின் தாக்கம் உங்களுக்கு இருந்தாலும் 1, 10-க்குடைய புதன் 10-க்கு திரிகோணமாக இருப்பதால் தொழில் யோகம் தொய்வில்லாமல் தொடர்ந்து செயல்படும். அதனால் கடன் வட்டி வாசிகளை நாணயமாகச் செலுத்தி நல்ல பெயர் எடுக்கலாம். உங்களுக்கு வரவேண்டிய பாக்கிகளை கொடுக்காமல் இழுத்தடித்தாலும் ஏமாற்றமில்லாமல் தாமதமாக வசூல் ஆகும். வெளியூர் பயணங்களால் புதிய தொழில் ஒப்பந்தங்கள் அல்லது வேலை வாய்ப்புகள் நிறைவேறும். வருமானம் கூடும். செலவு நடைகளும் கூடும். சில நல்ல காரியங்களுக்காக சுபக்கடனும் வாங்கலாம். 11-ல் உள்ள செவ்வாய் சனியின் சாரத்தில் வக்ரமாகவும் நீசபங்க ராஜயோகமாகவும் இருப்பதால் வெற்றியும் லாபமும் பெருகும்.

துலாம் (சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய) துலா ராசிக்கு 4, 5-க்குடைய சனி 12-ல் மறைவு. விரயச்சனி (ஏழரைச்சனியில் விரயச் சனி) இது சுபவிரயச்சனி. எனவே பிள்ளைகள் வகையில் பூமி, வீடு, இடம், மனை அமையும் யோகம் உண்டாகும். சிலருக்கு வாகனம் வாங்கும் அமைப்பும் ஏற்படும். இவற்றின் முதலீட்டிற்காக கடன் வாங்கும் யோகமும் உண்டாகும். அது சுபக்கடன். 3, 6-க்குடைய குரு 5-ல் நின்று ராசியைப் பார்ப்பதும், ராசிநாதன் சுக்கிரனோடு சேர்ந்திருப்பதும், லாபாதிபதி சூரியனோடும் விரயாதிபதி புதனோடும் சேர்ந்திருப்பதும் ஏதாவது ஒரு சொத்தை லாபத்திற்கு விற்று இன்னொரு இடத்தை வாங்கவோ அல்லது வாங்கிய இடத்தில் வீடு கட்டவோ முயற்சிகளை மேற்கொள்ளலாம். எஸ்டிமேட் தொகையில் பற்றாக்குறைக்கு கடனும் வாங்கலாம். பிள்ளைகள் பேரில் செயல்படலாம். 4-ஆம் இடத்தை செவ்வாய் பார்ப்பதால் (செவ்வாய் 7-க்குடையவர் என்பதால்) உங்களுக்கோ மனைவிக்கோ உடல் நலத்தைப் பற்றிய கவலையும், சிகிச்சையும், வைத்தியச் செவுகளும் ஏற்படும். இருந்தாலும் குருவின் பார்வை கிடைப்பதால் பயப்படத் தேவையில்லை. பாதிப்பிற்கும் இடம் இல்லை.

விருச்சிகம் (விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய) விருச்சிக ராசிநாதன் செவ்வாய் பாதக ஸ்தானத்தில் நிற்பது குறைதான். விருச்சிக ராசி, ஸ்திர ராசி. அதற்கு 9-ஆம் இடமும் 9-க்குடையவரும் பாதகஸ்தானம், பாதகாதிபதி ஆவார்கள். 9-ஆம் இடம் சுத்தமாக இருந்தால் சந்திரனே முழு பாதகாதிபதி ஆவார். 9-ல் கிரகம் இருந்தால் அந்த கிரகத்திற்கே அந்த பாதகத் தன்மை சேர்ந்துவிடும். ஆகவே, செவ்வாய் பாதகாதிபத்திய தோஷம் அடைகிறார். என்றாலும் அவர் நீசம் வக்ரம் என்பதால் அதன் வேகம் குறையும். அதைக் காட்டிலும் லக்னாதிபதி அல்லது ராசியாதிபதி எங்கிருந்தாலும் அது புனிதமடையும். புனித நதி கங்கையில் அசுத்தங்கள் கலந்தாலும் அவை புனிதம் பெறும். கங்கைக்கும் அந்த களங்கம் ஏற்படாது என்பதுபோலவும் நெருப்பை நெருப்பு சுடாது என்பதுபோலவும் லக்னாதிபதி ராசியாதிபதிக்கு விதிவிலக்கு உண்டு. செவ்வாய் சகோதர காரகன் என்பதால் அந்த சகோதர வகையில் மட்டுமே பாதக பலன் நடக்கும். அத்துடன் செவ்வாயின் தசாபுக்திகளையும் அது பாதிக்கும். மற்ற வகையில் பாதிப்பு ஏற்படாது. 10-க்குடைய சூரியனும் 11-க்குடைய புதனும் 2-க்குடைய குருவும் 7-க்குடைய சுக்கிரனும் இணைவதால் மனைவி வகையில் தொழில் யோகம் சிறப்படையும்.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய) தனுசு ராசிநாதன் குரு 3-ல் மறைந்திருப்பதாலும் ராகுவின் சாரம் பெறுவதாலும், சதயம் 3-ல் வர்க்கோத்தமமாக இருப்பதாலும், ராகு ஜென்ம ராசியில் நிற்பதாலும் உங்கள் கௌரவம், கீர்த்தி, செல்வாக்கு, புகழ், பெருமை இவற்றுக்கு எந்த வகையிலும் கேடு கெடுதிக்கு இடமில்லை. சிலருக்கு தேக சௌக்கியத்தில் சிறுசிறு சங்கடங்கள் தோன்றினாலும் பாதிக்காது. சிலருக்கு வீட்டுக் கவலை அதிகமாக இருக்கலாம். வசதியான வீடு அமையவில்லையே என்ற கவலை ஏற்படலாம். அல்லது பக்கத்து வீட்டுக்காரர்களின் தொல்லைகளினால் மனவேதனை அடையலாம். சொந்த வீட்டில் குடியிருப்பவர்களும் குறை வேலையை பூர்த்தி பண்ண முடியவில்லையே என்ற ஆதங்கம் ஏற்படலாம். இவை எல்லாம் குருவின் அஸ்தமனத்தின் பலன். மார்ச் 22 குரு உதயமானவுடன் இந்தக் குறைகள் எல்லாம் நீங்கிவிடும். அதுவரை உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலை தூக்காமலும் தன்னம்பிக்கை குறையாமலும், நடப்பது தாமதமானாலும் நடக்க வேண்டியது நல்ல நேரத்தில் நல்லபடி நடக்கும் என்ற மன தைரியத்தோடு நாளைக் கடத்துங்கள். நாளைய பொழுது நல்ல பொழுதாக அமையும்.

மகரம் (உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய) மகர ராசிநாதன் சனி தன் ராசிக்கு பாக்கியத்தில் நிற்க, அந்த வீட்டுக்குடைய புதன் மகர ராசிக்கு 2-ல் தன ஸ்தானத்தில் நிற்க, சனியும் புதனும் பரிவர்த்தனை யோகம் பெறுகிறார்கள். இந்தப் பரிவர்த்தனை தனாதிபதி பாக்கியாதிபதி பரிவர்த்தனையாகும். அத்துடன் 9-க்குடைய புதனும் 10-க்குடைய சுக்கிரனும் சேர்ந்திருப்பதால் தர்மகர்மாதிபதி யோகமும் உங்களை வழி நடத்தும். இவை தனித்திருந்தால் மேற்கண்ட யோகங்கள் எல்லாம் நூறு சதவீதம் நடக்கும். ஆனால் அட்டமாதிபதி சூரியனும், விரயாதிபதி குருவும் இவர்களோடு இணைவதால் மேற்கண்ட யோகத்தில் முழு நிறைவான பலனை எதிர்பார்க்க முடியாது. திருவிளையாடல் திரைப்படத்தில் தருமி கொண்டு வந்த பாட்டில் பிழை இருக்கிறது என்று நக்கீரர் சொன்னவுடன் பிழை இருந்தால் என்ன! அதற்குரிய தொகையை பரிசுத் தொகையில் குறைத்துக் கொண்டு மீதிப் பரிசை கொடுங்கள் என்று தருமி கேட்ட மாதிரி! அட்டமாதிபதியும் விரயாதிபதியும் அந்த யோகத்தைக் குறைக்கிறார்கள். ஜாதக தசாபுக்திகள் யோகமாக இருந்தால் ஏலச்சிட்டில் கடைசியில் கட்டிய தொகைக்குமேல் லாபத்தோடு பணம் பெறலாம். ஆரம்பத்தில் கசனு நீக்கி எடுத்தால் குறைந்த தொகை கிடைக்கும். அதுபோல உங்கள் யோகம்.

கும்பம் (அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய) கும்ப ராசிநாதன் சனி 8-ல் மறைவது குற்றம்தான். அதனால் அலைச்சல் கூடும். தொடங்கும் காரியங்கள் முற்றுப்பெறாமலும் முழுமையடையாமலும் தள்ளிப்போகும். பொருளாதாரத்தில் நிறைவு இருக்காது. நிதி நிலை சிரமமாகவும் சிக்கலாகவும் மந்தமாகவும் இருக்கும். ஆனால் சனிக்கு வீடு கொடுத்த புதன் ஜென்ம ராசியில் நிற்பதால் சனியும் புதனும் பரிவர்த்தனை யோகம் அடைகிறார்கள். ஆகவே கால தாமதம் ஏற்பட்டாலும் போட்டிகளும் குறுக்கீடுகளும் ஏற்பட்டாலும் தோல்வியைக் கண்டு துவளாமல் விடாமுயற்சியோடு செயல்படுவீர்கள். அதனால் வெற்றியைத் தேடிப்பிடித்து அடைவீர்கள். யோகம் இருப்பவர்க்கு வெற்றி தானாகத் தேடி வரும். யோகம் குறைந்தவர்க்கு வெற்றி இருக்கும் இடத்தை நாடிப்போய் அடைய வேண்டும். இதுதான் வித்தியாசம். ராசிநாதன் வலுவாக இருந்தால் யோகம். ராசிநாதன் 6, 8, 12-ல் மறைவாக இருந்தால் யோகமில்லை. இங்கு பரிவர்த்தனை என்பதால் நடுநிலைக்குச் சமம். அதேசமயம் 9-க்குடைய சுக்கிரனை 10-க்குடைய செவ்வாய் பார்ப்பதாலும் 2, 11-க்குடைய குருவும் அங்கு சம்பந்தப்படுவதாலும் தர்மகர்மாதிபதி யோகம் தனலாப யோகமும் ஏற்படுவதால் பணப்பற்றாக்குறை இருக்காது. தேவைகள் நிறைவேறும்.

மீனம் (பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி முடிய) மீன ராசிநாதன் குரு தன் ராசிக்கு 12-ல் மறைவது பலக்குறைவு என்றாலும், அவருக்கு வீடு கொடுத்த சனி ராசியைப் பார்ப்பதாலும் குருவுக்கு சாரம் கொடுத்த ராகு, குருவுக்கு 11-ல் ராசிக்கு 10-ல் இருப்பதாலும் தனலாபம் உண்டு. பொருளாதார நெருக்கடி இருக்காது. எளிதாக எல்லாக் காரியங்களும் நிறைவேறும். அதே சமயம் ஈடுபடும் காரியங்கள் யாவும் சிறுசிறு தடைகளுக்குப் பிறகு நிறைவேறும். சேமிப்பு இல்லாதபடி செலவு வரும்; வரவும் வரும். 4-ல் கேது இருப்பதால் சில சமயங்களில் உடல் உபாதைகள் உங்களுக்கு கவலையை ஏற்படுத்தினாலும் குருவும் குருவுக்கு வீடு கொடுத்த சனியும் குருவுக்கு சாரம் கொடுத்த ராகுவும் கேதுவைப் பார்ப்பதோடு, சுகாதிபதி புதனும் குருவோடு கூடியிருப்பதாலும் மலைபோல வரும் துன்பங்களும் பிணி, பீடைகளும் பனிபோல விலகிவிடும். பாட்டி வைத்தியத்திலேயே குணமாகிவிடும். குரு 6-ஆம் இடத்தைப் பார்ப்பதால் சிலருக்கு கடன்களும் சிலருக்கு போட்டி- பொறாமைகளும் ஏற்பட்டாலும் 11-ஆம் இடத்தை செவ்வாய் பார்ப்பதால் எல்லாவற்றையும் வெற்றி கொள்வீர்கள்.
   

JPAGE_CURRENT_OF_TOTAL

 

 

தமிழ்மிரர் செய்திகளை உங்களது இ-மெயிலில் பெற்றுக்கொள்ள இங்கே பதிவு செய்யுங்கள்

Enter your email address: