வெள்ளிக்கிழமை, 18 மே 2012

இம்ரான் கானின் கூட்டத்திற்கு அருகில் குண்டுவெடிப்பு; ஒருவர் பலி, 11 பேர்காயம்

 

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் ஈ இன்ஸாவ் (பி.ரி.ஐ.) கட்சியின் பிரசாரக் கூட்டமொன்றுக்கு அருகில் சற்றுமுன் குண்டுவெடித்ததனால் ஒருவர் கொல்லப்பட்டதுடன் குறைந்தபட்சம் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

எனினும் தான் பாதுகாப்பாக இருப்பதாக இம்ரான் கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாவட்டத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இக்கூட்டம் முடிவடைந்தபோது கைக்குண்டுகள் வீசப்பட்டதாகவும் அதைத் தொடர்ந்து பலத்த துப்பாக்கிப் பிரயோகங்கள் இடம்பெற்றதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இக்கூட்டம் முடிவடைந்தபோது கைக்குண்டுகள் வீசப்பட்டதாகவும் அதைத் தொடர்ந்து பலத்த துப்பாக்கிப் பிரயோகங்கள் இடம்பெற்றதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்களில் பொலிஸாரும் அடங்குகுகின்றனர்.

 

Views: 436

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.