மத்திய அமெரிக்க நாடான ஹொண்டுராஸில் சிறைச்சாலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால் குறைந்தபட்சம் 272 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தலைநகர் டெகுசிகல்பாவிலிருந்து 75 கிலோமீற்றர் தொலைவிலுள்ள கொமாயாங்குவா நகரிலுள்ள சிறைச்சாலையில் புதன்கிகிழமை காலை இத்தீவிபத்து இடம்பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இத்தீ எவ்வாறு ஏற்பட்டது என்பதை அறிவதற்கு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைதிகளின் கலகம் காரணமாக அல்லது மின்சார ஒழுக்கு காரணமாக இத் தீ ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக ஹொண்டுராஸ் சிறைச்சாலைகளுக்குப் பொறுப்பான தலைமை அதிகாரி டானியெலோ ஒரெல்லானா கூறியுள்ளார்.


Comments
RSS feed for comments to this post