வெள்ளிக்கிழமை, 18 மே 2012

ஆறு ஐரோப்பிய நாடுகளுக்கான எண்ணெய் ஏற்றுமதியை ஈரான் நிறுத்தியது

 

ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த  ஆறு நாடுகளுக்கு எண்ணெய் ஏற்றுமதியை ஈரான் நிறுத்தியுள்ளதாக ஈரானிய அரசாங்கத் தொலைக்காட்சியான பிரஸ் ரீவி இன்று புதன்கிழமை  தெரிவித்துள்ளது.

ஈரானிலிருந்து எண்ணெய் இறக்குமதியை நிறுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்தமைக்கு பதிலடியாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிரான்ஸ், கிறீஸ், ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து,போர்த்துக்கல், ஸ்பெய்ன் ஆகிய நாடுகளின் தூதுவர்கள் ஈரானிய அரசாங்கத்தினால் அழைக்கப்பட்டு ஈரானின் நிலைப்பாடு தெரிவிக்கப்பட்டதாக ஏ.எவ்.பி. செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும் எண்ணெய் குறித்து கலந்துரையாடப்படவில்லை என ராஜதந்திர ஒருவர்கூறியதாக ஏ.எவ்.பி. தெரிவித்துள்ளது.
ஈரானின் அறிவிப்பு தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் வலுசக்தி ஆணையாளர் குவென்தர் ஒட்டின்ஜர் கூறுகையில், 'எண்ணெயை சர்வதேச சந்தையில் பெற்றுக்கொள்ளலாம். தான் உற்பத்தியை அதிகரிக்கப் போவதாக சவூதி அரேபியா தெரிவித்துள்ளது' எனக் கூறியுள்ளார்.

ஒபெக் அமைப்பிலுள்ள நாடுகளில் சவூதி அரேபியாவுக்கு அடுத்ததாக இரண்டாவது எண்ணெய் ஏற்றுமதி நாடாக ஈரான் உள்ளது. அங்கு தினமும் 3.5 மில்லியன் பீப்பா எண்ணெய் உற்பத்தி செய்யப்படுகிறது. அவற்றில் 2.5 மில்லியன் பீப்பா எண்ணெய் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
 

Views: 1256

Comments   

 
0#guru2012-02-16 17:28
நல்ல செயல். பாராட்டு.
Reply
 
 
0#meenavan2012-02-17 02:19
பலஸ்தீனில் உனது அரபு சகோதரன் தினமும் இஸ்ரேல் எஹூதியினால் கொல்லப்படும் நிலையில், எண்ணெய் உற்பத்தியை குறைத்து எதிர்ப்பை தெரிவிக்க முடியாத சவூதி அரசு, பாரசீக சகோதரன் அமெரிக்க அச்சுறுத்தலுக்கு அடிபடிய மறுத்தமைக்கு பரிகாரமாக எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து மேற்குலகுக்கு உதவி செய்வதை எவ்வாறு அழைக்கலாம்? முஸ்லிம் உம்மாவின் நிலை பரிதாபம்......?
Reply
 
 
0#ummpa2012-02-18 19:24
நாங்கள் அவங்கள் சொல் கேட்கும் அன்புள்ளவர்கள். இல்லாவிட்டால் சீட்டு கிழிந்துவிடும். அதக்கு உதாரணம் லிபியாவின் தலைவன் கதாபி! சொல்கேட்க மறுத்தார் காரணம் இறுதிவரை துண்டாட்டம். அதக்கு கத்தார் தலைமை உதவியது. இன்று பாருங்கள் பஹ்ரைன் நிலைமை அமெரிக்காவின் கைப்பிள்ளை அதன் நிலை ! இறைவன் பொறுமையாளன். சியா, சுன்னி என்று பிரித்து விட்டார்கள் அதன் பெறுபேறு இதுதான்.
அதற்கு ஈமான் உறுதியானால் மட்டும் தான் முஸ்லிம் உம்மாவுக்கு விடுதலை அதக்காக தனியாகவோ கூட்டாகவோ இறைவனை பிராத்திப்போம்.
Reply
 

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.