வெள்ளிக்கிழமை, 18 மே 2012

இஸ்ரேலிய டிரக்- பலஸ்தீன பஸ் மோதல்; பலஸ்தீன சிறார்கள் 8 பேர் பலி

இஸ்ரேலிய ட்ரக் வண்டியொன்றுடன் பலஸ்தீன பஸ் ஒன்று மோதியதால் குறைந்தபட்சம் 8 பலஸ்தீன சிறார்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பலஸ்தீனத்தின் மேற்க்குறை வீதியொன்றில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இம்மோதல் காரணமாக மேற்படி பஸ் குடைசாய்ந்து தீப்பற்றத் தொடங்கியது. இதனால் முப்பதுக்கும் அதிகமானோர் காயமடைந்ததாகவும் இறந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேற்படி பஸ்ஸில் சுமார் 50 பேர் பயணம் செய்துள்ளனர்.

இவ்விபத்தையடுத்து 3 நாள் துக்க தினத்தை பலஸ்தீன ஜனாதிபதி மொஹமட் அப்பாஸ் பிரகடனப்படுத்தியுள்ளார். (படங்கள் ஏ.எவ்.பி)

Views: 381

Comments   

 
0#MADURANKULI KURANKAAR2012-02-20 09:15
இது ஒரு ஆக்சிடென்ட் போல் திட்டமிட்ட செயல்.
Reply
 

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.