வெள்ளிக்கிழமை, 18 மே 2012

ஜேர்மன் ஜனாதிபதி ராஜினாமா

 

ஜேர்மனிய ஜனாதிபதி கிறிஸ்டியன் வூல்வ் அப்பதவியிலிருந்து இன்று வெள்ளிக்கிழமை ராஜினாமாச் செய்துள்ளார்.

அவர் 2008 ஆம் ஆண்டு  ஜேர்மனியின் லோவர் சக்ஸோனி மாநில பிரதமராக பதவி வகித்தபோது  செல்வந்த வர்த்தகரான இகோன் ஜேம்ஸ்கீர்கன்ஸ் என்பவரின் மனைவியிடமிருந்து குறைந்த வட்டியிலான வீட்டுக்கடன் ஒன்றை பெற்றமை தொடர்பான சர்ச்சையே இதற்குக் காரணம். 

இந்த வர்த்தகருடன் கிறிஸ்டியன் வூல்புக்கு ஏதேனும் வர்த்தகத் தொடர்புகள் உள்ளனவா என லோவர் சக்ஸோனி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. அவ்வர்த்தகருடன் தொடர்புகள் எதுவும் இல்லையென வூல்ப் மறுத்தார். வர்த்தகரின் மனைவியுடனான வர்த்தக தொடர்புகள் குறித்து அவர் பேசவில்லை.

2010 ஆம் ஆண்டு முதல் ஜனாதிபதியாக பதவி வகித்துவரும் கிறிஸ்டியன் வூல்புக்கான  சட்ட விதிவிலக்கை நீக்க வேண்டுமென வழக்குத் தொடுநர்கள் வலியுறுத்தியதையடுத்து அவர் இன்று வெள்ளிக்கிழமை ராஜினாமா செய்துள்ளார்.

ஜேர்மனியில் ஜனாதிபதி பதவி பொதுவாக அலங்காரப் பதவியொன்றாகவே உள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Views: 599

Comments   

 
0#neethan2012-02-18 04:52
ஜெர்மனி ஜனாதிபதிக்கு நிறைவேற்று அதிகாரம் இல்லை போலும். அங்கு ஜனநாயகம் இங்கு சதா அந்நியமாகும் ஜனநாயகம்.
Reply
 
 
0#siriththiran2012-02-18 18:27
அவர்கள் ஏனைய நாடுகளுடன் எப்படி நடந்து கொண்டாலும் ஜனநாயக பண்பாட்டில் மேற்குலகம் எமக்கு முன்மாதிரி தான் ..... இங்கு எத்தனையோ அரசியல்வாதிகள் எதனை தடவையோ மரியாதை கெட்டும் கதிரையை மட்டும் விட்டு இறங்குகிறார்களில்லையே .
Reply
 

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.