பாகிஸ்தானில் இன்று இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலொன்றில் 26 பேர் பலியாகியுள்ளனர்.
பாகிஸ்தானின் வடமேற்கில் ஆப்கானிஸ்தான் எல்லையிலுள்ள பழங்குடியினர் வாழும் குர்ராம் பிராந்தியத்தின் பிராச்சினார் நகரிலுள்ள ஷியா பள்ளிவாசலுக்கு வெளியில் இந்த குண்டுத்தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த குண்டுவெடிப்பையடுத்து ஷியா சமூகத்தினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததால் மேலும் மூவர் உயிரிழந்துள்ளனர்.
தெஹ்ரீக் - ஈ- தலிபான் பாகிஸ்தான் தலிபான் அமைப்பிலிருந்து பிரிந்த சென்ற குழுவின் இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்பதாக அக்குழுவின் தலைவர்களில் ஒருவரான பஸால் சயீட் கூறியுள்ளார்.
பிராச்சினாரிலுள்ள ஷியா சமூகத்தினர் எமக்கு எதிராக செயற்படுவதால் நாம் அவர்களை இலக்குவைத்தோம்' என அவர் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.


Comments
RSS feed for comments to this post