வடமெக்ஸிக்கோவிலுள்ள சிறைச்சாலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மோதலில் 44 பேர் பலியாகியுள்ளனர்.
இரு வெவ்வேறு போதைப்பொருள் அமைப்புக்களைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு இடையில் இந்த மோதல் ஏற்பட்டதாகவும் இதன்போது அவர்கள் கற்கள் மற்றும் தாங்களே தயாரித்த ஆயுதங்களைக் கொண்டு மோதலில் ஈடுபட்டதாகவும் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறினார்.
பாதிக்கப்பட்டவர்களில் சிலர் கழுத்து நெரிக்கப்பட்டுள்ளனர்.
சிறைச்சாலைக் காவலர்கள் இந்த மோதலை ஏற்படுத்தியுள்ளனரா என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சிறைக்காவலர்கள் சிறையின் இரண்டு பகுதிகளை பிரிக்கும் கதவுகளை திறந்துவிட்டதாக சந்தேகிக்கப்படுகின்றது.
மெக்ஸிக்கோ சிறைச்சாலையில் இரு குழுக்களுக்கு இடையில் இவ்வாறான மோதல் சம்பவங்கள் இடம்பெறுவது வழமையானதொன்றாகிவிட்டது.

