பிலிப்பைன்ஸில் சிறைக்கைதியொருவரை மீட்பதற்காக ஆயுதபாணிகள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் மூவர் பலியானதுடன், 15 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வடகொட்டாபட்டோ மாகாணத்திலுள்ள கிடபாவன் நகரத்திலுள்ள சிறைச்சாலையிலேயே நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த சம்பவம் இடம்பெற்றதாகவும் இதன்போது 50 ஆயுதபாணிகள் இந்த தாக்குதலை மேற்கொண்டதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
மோரோ இஸ்லாமிய விடுதலை முன்னணியைச் சேர்ந்த தாக்குதல்தாரிகளே தமது தலைவரை விடுவிக்கும் முகமாக இந்த தாக்குதலை மேற்கொண்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இருப்பினும் போராளிக் குழுவினர் இதனை மறுத்துள்ளனர்.
ஆயுதபாணிகள் கிரனேற்றொன்றை வீசியபோது அதன் இலக்குத் தவறியதாகவும் துப்பாக்கிச் சத்தத்தின் பின்னர் பொலிஸார் உசார் அடைந்து திருப்பித் தாக்கியதாகவும் நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். பின்னர் மேலும் பல கிரனேற்றுக்களை வீசிய பின் ஆயுதபாணிகள் தப்பிச்சென்றுள்ளனர்.

