வெள்ளிக்கிழமை, 18 மே 2012

சீன உருக்குத் தொழிற்சாலையில் வெடிப்பு; 13 பேர் பலி

 

சீனாவின் வடகிழக்குப் பகுதியிலுள்ள உருக்குத் தொழிற்சாலையொன்றில் ஏற்பட்டுள்ள பாரிய வெடிப்புச் சம்பவத்தில் 13  பேர் பலியானதுடன், 17 பேர் காயமடைந்துள்ளதாக மேற்படி கம்பனி அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

அன்சான் மாகாணத்திலுள்ள அரசாங்கத்திற்குச் சொந்தமான  உருக்கு வார்ப்பு  தொழிற்சாலையொன்றிலேயே நேற்று திங்கட்கிழமை இரவு இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றது. இதில் பலியானவர்களின் சடலங்கள் இன்று செவ்வாய்க்கிழமை காலை மீட்கப்பட்டன.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வெடிப்புச் சம்பவத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படுவதாகவும் அத்தொழிற்சாலையின் பொறுப்பு வாய்ந்த அதிகாரியொருவர் கூறினார்.

Views: 89

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.