
ஆர்ஜென்டீனாவில் பயணிகள் நிறைந்த ரயிலொன்று ரயில்நிலைய எல்லையை கடந்து சென்று விபத்துக்குள்ளானதால் 49 பேர் பலியாகியுள்ளனர். தலைநகர் புவனர்ஸ் அயர்ஸிலள்ள ரயில் நிலையமொன்றில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இறந்தவர்களில் ஒரு குழந்தையும் அடங்குவதாக பொலிஸ் ஆணையாளர் நெஸ்டர் ரொட்ரிகஸ் தெரிவித்துள்ளார்.
வேகமாக வந்த ரயில் தடுப்புகளை உடைத்துக்கொண்டு சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் ரயில் என்ஜினும் அதன் பின்னாலிருந்த பெட்டிகளும் சேதமடைந்துள்ளன. ஒரு ரயில்பெட்டி, மற்றொரு பெட்டிக்குள் சுமார் 20 ஊடுருவியிருந்தாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த பல தசாப்தங்களில் ஆர்ஜென்டீனாவில் ஏற்பட்ட மிக மோசமான ரயில் விபத்து இதுவாகும். 1970 ஆம் ஆண்டு அங்கு இரு ரயில்கள் மோதிக்கொண்டதால் சுமார் 200 பேர் பலியாகியமை குறிப்பிடத்தக்கது.

