திங்கட்கிழமை, 22 டிசெம்பர் 2014
 

ஈராக், குண்டுத்தாக்குதல்கள், துப்பாக்கிப் பிரயோகங்களில் 33 பேர் பலி

 

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற பல  தாக்குதல்களில் 33 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாரை இலக்கு வைத்ததாக கருதப்படும் குண்டுவெடிப்புகளும் துப்பாக்கி பிரயோகங்களும் இடம்பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கராதா பகுதியில் சோதனைச்சாவடியொன்றுக்கு அருகில் இடம்பெற்ற குண்டுவெடிப்பொன்றில் 9 பேர் உயிரிழந்ததுடன் 24 பேர் காயமடைந்துள்ளனர். இக்குண்டுவெடிப்பினால் கட்டிடங்கள் அதிர்ந்ததுடன் ஜன்னல்களும் உடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பகோபா, கிர்குக், சலாஹுதீன் ஆகிய இடங்களிலும் குண்டுவெடிப்புகள் இடம்பெற்றுள்ளன.

 

Views: 1320

கருத்துஉங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.