ஆப்கானிஸ்தானில் நேட்டோ படையினரால் புனித குர் ஆன் எரிக்கப்பட்ட சம்பவத்திற்காக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா மன்னிப்பு கோரியுள்ளார்.
இது கவனக்குறைவான ஒரு பிழை என ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீட் கர்ஸாய்க்கு அனுப்பியுள்ள கடிதமொன்றில் ஒபாமா குறிப்பிட்டுள்ளதாக அமெரிக்க தேசிய பாதுகாப்புச் சபை பேச்சாளர் திமோதி விடேட்டர் இன்று வியாழக்கிழமை கூறியுள்ளார்.
இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் நடைபெறாதிருப்பதற்காக, பொறுப்பானவர்களை பதில்கூறச் செய்தல் உட்பட பொருத்தமான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்வோம் என ஒபாமா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நேட்டோ படையினர் மீது ஆப்கானிஸ்தான் தேசிய இராணுவத்தின் சீருடை அணிந்திருந்த நபர் ஒருவர் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததால் நேட்டோ படையினர் இருவர் கொல்லப்பட்டதாக அமெரிக்கா தலைமையிலான சர்வதேச பாதுகாப்பு உதவிப் படையினர் தெரிவித்துள்ளனர்.
புனித குர் ஆன் எரிப்புச் சம்பவத்திற்கு பழிவாங்குவதற்காக இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதா என சர்வதேச படையின் பேச்சாளர் ஒருவரிடம் கேட்டபோது, 'அம்மாகாணத்தில் இன்று ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது' என அவர் கூறினார்.
தொடர்புடைய செய்தி:
ஆப்கானிலுள்ள அமெரிக்கப் படைத்தளத்தில் குர்ஆன் பிரதிகள் எரிக்கப்பட்டதால் சர்ச்சை: நேட்டோ விசாரணை
.gif)

Comments
மனித மிருகங்கள் செய்திருப்பது படைத்தவனின் கலாமை எரித்துள்ளது. எனவே தண்டனை அவன் வழங்குவான்.
"அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்" ஆல்குரான்.
ஆமீன்.
மிஸ்டர் CLEMEND பைபிளை எரித்து விட்டு மன்னிப்பு கோரினால் நீங்கள் ஏற்று கொள்வீர்களா?
RSS feed for comments to this post