சனிக்கிழமை, 20 டிசெம்பர் 2014
 

ஆப்கானில் பனிச்சரிவினால் 42 பேர் பலி

 

ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற பனிப்பாறைச் சரிவு காரணமாக 42 பொதுமக்கள் பலியாகினதுடன், மேலும் பலர் காணாமல் போயுள்ளனர்.

ஆப்கானிஸ்தானின் வடகிழக்குப் பகுதியான படக்ஷான் மாகாணத்திலேயே நேற்று செவ்வாய்க்கிழமை இந்த பனிப்பாறைச் சரிவு ஏற்பட்டுள்ளது.

தஜிகிஸ்தான் எல்லைக்கு அருகிலுள்ள கிராமமொன்று நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக மாகாண ஆளுநர் அலுவலக அதிகாரியொருவர் கூறினார்.

சிகே மாவட்டத்திலுள்ள கிராமமொன்றில் பல எண்ணிக்கையான மக்கள் பலியாகியுள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாமெனவும் அஞ்சப்படுகின்றது.

படக்ஷான் மாகாணம் ஒரு பின்தங்கிய பகுதியென்பதுடன், ஏழ்மையான பகுதியெனவும் தெரிவிக்கப்படுகிறது.

இம்மாகாணத்தின் ஒரு பகுதி ஒவ்வொரு வருடமும் குறைந்தபட்சம் 6 மாதங்கள்  பாரிய பனியினால் மூடப்படுவது வழமையாகும்.

Views: 1260

கருத்துஉங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.