வெள்ளிக்கிழமை, 18 மே 2012

எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐ.தே.க, ஜ.ம.முன்னணியின் ஏற்பாட்டில் நீர்கொழும்பில் ஆர்ப்பாட்டம்

 

(கே.என்.முனாஷா)

சிலாபத்தில் மீனவர் படுகொலை, மற்றும் எரிபொருள் விலையேற்றம் ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று நீர்கொழும்பு நகரில் ஆர்பாட்ட பேரணி இடம்பெற்றது.

ஐக்கிய தேசியக் கட்சி, ஜனநாயக மக்கள் முன்னணி என்பன இணைந்து ஏற்பாடு செய்திருந்த இவ்வார்ப்பாட்ட பேரணியில், நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன, ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன், ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் தயாகமகே, சுதந்திரத்திற்கான அரங்க அமைப்பின் முக்கியஸ்த்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தளுபத்தை தேவாலயம் முன்பாக முற்பகல் 10.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட இப் பேரணி நீர்கொழும்பு - சிலாபம் பிரதான வீதியூடாக நகர மத்திக்கு பிரவேசித்தது. அங்கிருந்து கடற்கரைத்  தெருவுக்கு சென்று தேவாலயம் முன்பாக வந்தடைந்தது.

பின்னர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் ஆகியோர் ஹெமில்டன் வாவியுனூடாக படகில் பயணித்து தமது எதிர்ப்பை தெரிவித்தனர்.

Views: 395

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.