(கவிசுகி)
யாழ். இருபாலை கிழக்கு நாச்சிமார் கோயிலடிப் பகுதியில் சிறுவனொருவர் கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
இருபாலை சீ.சீ பாடசாலையில் தரம் 5 இல் கல்வி கற்று வந்த நாகராசா நிக்ஷன் (வயது 10) என்ற பாடசாலை மாணவனே இவ்வாறு உயிரிழந்ததுள்ளார்.
இவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனாவைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

