வெள்ளிக்கிழமை, 18 மே 2012

நட்டத்தில் இயங்கு யாழ். பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்கள்

 

(கவிசுகி)

யாழ்.பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்கள் மிகவும் நட்டத்தில் இயங்குவதாக யாழ்.மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் எஸ்.அருந்தவபாலன் தெரிவித்துள்ளார். யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்ற கூட்டுறவாளர்களின் முக்கிய கலந்துரையாடலின் போதே இவ்விதம் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், உற்பத்திப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கான செலவு அதிகரித்துள்ளதினால் விற்பனை விலையில் வீழ்ச்சி நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக யாழில் பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்கள் நட்டத்தில் இயங்குவதற்கு அடிப்படைக் காரணமாக இருப்பதாக தெரிவித்தார்.

கூட்டுறவுத் துறையை அபிவிருத்தி செய்வதற்கு அனைவரது ஒத்துழைப்பும் தேவை எனவும் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலம் கூட்டுறவுத் துறையை அபிவிருத்தி செய்யலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Views: 142

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.