வெள்ளிக்கிழமை, 18 மே 2012

இ.போ.ச. பஸ் மீது கல்வீச்சு; சாரதி காயம்

 

(கவிசுகி)
    
யாழ்ப்பாணம், அரியாலைப் பகுதியில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்று மீது கல்வீச்சு இடம்பெற்றதாகவும்  இதில்  படுகாயமடைந்த சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அரியாலை மாம்பழச் சந்தியில் நேற்று திங்கட்கிழமை மாலை இலங்கை போக்குவரத்துச் சபையின் யாழ்ப்பாண சாலைக்கு சொந்தமான பஸ் மீதே  இனந்தெரியாதோர் கல்வீச்சு மேற்கொண்டதாகவும் இதன்போது பஸ்ஸின் முன்கண்ணாடிகள் சேதமடைந்ததாகவும் பொலிஸார் கூறினர்.

காயமடைந்த பஸ்ஸின் சாரதி  யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

Views: 105

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.