(கவிசுகி)
யாழ்ப்பாணம், அராலி வசந்தபுரம் பகுதியில் 10 வயதுச் சிறுமியொருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் நேற்று திங்கட்கிழமை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அருகிலுள்ள வீட்டிற்கு இரவு வேளையில் நெருப்புப்பெட்டி வாங்குவதற்காகச் இச்சிறுமி சென்றபோதே பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டதாகவும் சந்தேக நபர் சிறுமியின் வாயில் துணியைத் திணித்துவிட்டு பாலியல் வல்லுறவு மேற்கொண்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மருத்துவ பரிசோதனைக்காக இவர்கள் இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர் யாழ். நீதவான் நீதிமன்றத்தில் நாளை புதன்கிழமை ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

