(கவிசுகி)
யாழ்.வாழ்வியல் தொடர்பான புகைப்படக் கண்காட்சியென்று எதிர்வரும் 25 ஆம் திகதி யாழ்.பொது நூலகத்தில் நடைபெறவுள்ளதாக பலாலி படைத்தலைமையக ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இக்கண்காட்சியினை யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் சிவில் ஒழுங்கமைப்புடன் இராணுவத்தினர் நடாத்தவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று நாட்கள் இடம்பெறவுள்ள இக்கண்காட்சியில் இராணுவத்தினரால் யாழ்ப்பாணத்தில் எடுக்கப்பட்ட யாழ்ப்பாண வாழ்வியல் மற்றும் யாழ்ப்பாண மக்களின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் 400 இற்கும் அதிகமான புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

