வெள்ளிக்கிழமை, 18 மே 2012

24 மணிநேரத்தில் போக்குவரத்து விதிகளை மீறிய 36 பேருக்கு எதிராக யாழில் வழக்கு

 

(கவிசுகி)

யாழ். நகரப்பகுதியில் 24 மணிநேரத்திற்குள் போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் செலுத்திய 36 பேர் மீது யாழ். போக்குவரத்து பொலிஸார் வழக்கு தொடுத்துள்ளனர்.

இந்த வழக்கு இன்று புதன்கிழமை யாழ்.நீதிவான் நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது. குற்றத்தை ஒப்புக்கொண்டதன் பிராகாரம் யாழ்.நீதிமன்ற நீதிவான் மா.கணேசராச 36 பேருக்கு 1,52,000 ரூபா அபராதம் விதிக்க தீர்ப்பளித்தார். 

இதேவேளை யாழ்.நகரில் போக்குவரத்து விதிகளை பொலிஸார் மிகவும் இறுக்கமாக கடைப்பிடிக்குமாறு யாழ்.போக்குவரத்து பொலிஸாருக்கு யாழ்.நீதிமன்ற நீதிவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Views: 103

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.