.
சனிக்கிழமை, 22 நவம்பர் 2014
 

நாய்கள் சத்தமிட்டதால் அயல் வீட்டாருக்கு தொந்தரவு; உரிமையாளருக்கு அபராதம்

 

(கவிசுகி)

வீட்டுக்கு வெளியில் நாய்களை கூட்டில் அடைத்து அந்த நாய்கள் போடும் சத்தத்தினால் அயல் வீட்டாரின் நிம்மதியைக் கெடுத்தார் என்ற குற்றச்சாட்டில் யாழ். நாவலர் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கு யாழ்.நீதிவான் நீதிமன்றம் 1000 ரூபா அபராதம் விதித்துள்ளது.

யாழ். நாவலர் பகுதியில் வீட்டுக்கு வெளியில் நாய்க்கூடு அமைத்து நாய்களை அடைத்து வைத்து அது பொதுமக்களின் போக்குவரத்திற்கு மற்றும் அயல் வீட்டாரின் நிம்பதியைக் கெடுத்ததன் காரணமாக கோப்பாய் பொலிஸார் நாய்களின் உரிமையாளருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு இன்று வெள்ளிக்கிழமை யாழ்.நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குற்றத்தை ஒப்புக்கொண்ட நாய்களின் உரிமையாளருக்கு 1000 ரூபா அபராதம் விதித்து  யாழ்.நீதிமன்ற நீதிவான் மா.கணேசராசா தீர்ப்பு வழங்கினார்.

Views: 3165

கருத்துஉங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.