.
திங்கட்கிழமை, 24 நவம்பர் 2014
 

யாழில் வட கடல் வளங்கள் தொடர்பாக 4 நாடுகள் பங்குபற்றும் சர்வதேச ஆய்வு மாநாடு

(கவிசுகி)

வட கடல் வளங்கள் தொடர்பாகவும் மன்னார் வளைகுடா கடல்சார் உயிரினங்கள் தொடர்பாகவும் ஆராயும் மூன்று நாள் சர்வதேச ஆய்வு மாநாடு யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது என யாழ். பிராந்திய கடற்றொழில் நீரியல்துறை திணைக்கள பணிப்பார் எஸ்.கணேசமூர்த்தி தெரிவித்தார்.

இந்த சர்வதேச ஆய்வு மாநாட்டிற்காக இந்தியா, தாய்லாந்து, சீனா மற்றும் இந்தனோசியா அகிய நாடுகளில் இருந்து சுமார் 30 ஆய்வாளர்கள் வருகை தரவுள்ளனர்.

எதிர்வரும் ஜுன் 18ஆம் திகதி தொடக்கம் 21ஆம் திகதி வரை இந்த வட கடல் வளங்கள் தொடர்பாக ஆய்வு மாநாடு நடைபெறவுள்ளது. இந்த ஆய்வு மாநாட்டிற்காக இலங்கையிலுள்ள பல்கலைக்கழக கடல்சார் நிபுணர்கள் கலந்துகொண்டு கருத்துரையாற்றவுள்ளனர்.

மன்னார் வளைகுடாவில் எண்ணை வளம் தொடர்பாவும் இந்த மாநாட்டில் ஆராயப்படவுள்ளது என பணிப்பார் எஸ்.கணேசமூர்த்தி மேலும் தெரிவித்தார்.
Views: 1152

கருத்துஉங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.