.jpg)
(நவரத்தினம்)
வவுனியா, பம்பைமடு பிரதேசத்தில் புற்றுநோய் வைத்தியசாலைக்கான அடிக்கல் நீண்ட காலத்திற்கு முன்னர் நாட்டப்பட்ட நிலையில் எவ்வித செயற்பாடுகளும் நடைபெறாது அடிக்கல் நாட்டப்பட்ட இடம் பற்றைகள் மூடிய நிலையில் காணப்படுகின்றது.
புற்றுநோய் வைத்தியசாலை அமைப்பதற்காக பல ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டநிலையில் அமைச்சர்கள் மற்றும் வவுனியா அராசாங்க அதிபரினால் இவ் அடிக்கல் நாட்டப்பட்டிருந்ததது. எனினும் பல்வேறு காரணங்களால் அவ் வைத்தியசாலை கட்டப்படாது காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டத்தில் புற்றுநோய் தாக்கத்திற்கு உள்ளானவர்கள் தொடர்ச்சியாக யாழ்வைத்தியசாலைக்கும் மகரகம வைத்தியசாலைக்கும் சென்று சிகிச்சை பெறவேண்டிய சூழல் காணப்படுவதாகவும் தெரியவருகின்றது.

