
சைல்பண்ட் கொரிய நிறுவனத்தின் ஆதரவுடன் சைல்பண்ட் ஸ்ரீலங்கா நிறுவனத்தினர் கிளி.வட்டக்கச்சி இராமநாதபுரம் கிழக்கு அ.த.க.பாடசாலைக்கு சுமார் 21 இலட்சம் ரூபா செலவில் வகுப்பறைக் கட்டடத்தினையும் நீர் விநியோக வசதிகளையும் சிறுவர் விளையாட்டு முற்றத்தினையும் அமைத்துக் கொடுத்துள்ளனர். இக்கட்டிடத் திறப்பு விழா இன்று புதன்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வுகளில் சைல்பண்ட் நிறுவனத்தின் கொரியநாட்டு பிரதிநிதி சான் மி மூன் வலைப்பின்னல் முகாமையாளர் கீர்த்தி கொஸ்வத்தை ஈ.பி.டி.பி.யின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் தவநாதன் சைல்பண்ட் நிறுவனத்தின் கிளிநொச்சி மாவட்ட முகாமையாளர் மதிவண்ணன் மற்றும் கல்விசார் அதிகாரிகளும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிறுவனத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் கண்டாவளை உதவி அரசாங்க பிரிவில் 4 ஆரம்ப பாடாலைகளையும் கரைச்சி உதவி அரசாங்க அதிபர் பிரிவில் 4 ஆரமப பாடசாலைகளையும் புனரமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

