(நவரத்தினம்)
வவுனியாவில் மர முந்திரிகை செய்கையினை ஊக்குவிக்கும் முகமாக கடந்த வருடம் நான்கு பிரதேச செயலகப் பிரிவுகளிலும் நூறு ஏக்கரில் மர முந்திரிகை செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மர முந்திரிகை பயிர்ச்செய்கை ஊக்குவிப்பு உத்தியோகஸ்தர் தெரிவித்தார்.
இதேவேளை 'திவிநெகும' திட்டத்தின் கீழ் நான்கு பிரதேச செயலகப் பிரிவுகளிலும் 11,500 மர முந்திரிகை கன்றுகள், தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு வருவதாகவும் இதன் மூலம் செட்டிகுளம் மற்றும் நெடுங்கேணி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பயனாளிகளுக்கு மர முந்திரிகை கன்றுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

