.jpg)
(நவரத்தினம்)
இவ்வாண்டு இடம்பெறவுள்ள குடிசன மற்றும் வீட்டு வசதிகள் தொகை மதிப்பு பணிகளின் முதல் கட்டம் நிறைவடைந்துள்ள நிலையில் எதிர்வரும் 27ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 19ஆம் திகதி வரை சனத்தொகை தகவல் சேகரிக்கும் சுற்று ஆரம்பமாகவுள்ளதாக வவுனியா மாவட்ட புள்ளிவிபரத் திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இப்பணியில் ஈடுபடவுள்ள அனைத்து கணக்கெடுப்பாளர்களுக்கும் அதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் பயிற்சி பெற்றவர்கள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு மார்ச் 20ஆம் திகதி மற்றும் 21ஆம் திகதிகளில் மீளாய்வு செய்வர் எனவும் அவ்வதிகாரி குறிப்பிட்டார்.
அத்துடன், பெறப்பட்ட தகவல்களை உறுதிப்படுத்திய பின் தகவல் சேகரித்த படிவம் மற்றும் அதன் தொகுப்புக்களை பிரதேச செயலக புள்ளி விபர உத்தியோகஸ்தர்களிடம் கையளிக்கப்படும் எனவும் மார்ச் மாதம் 23ஆம் திகதி தவல்கள் அனைத்தும் அந்தந்த மாவட்ட செயலாளரிடம் கையளிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

