.
சனிக்கிழமை, 22 நவம்பர் 2014
 

'எரிபொருள் விலையேறினாலும் கடலுணவுகளில் விலையேற்றமில்லை'

 

 

(நவரத்தினம்)

எரிபொருள் விலையேற்றம் வவுனியா மாவட்டத்தில் கடலுணவுகளில் விலையேற்றத்தை ஏற்படுத்தவில்லை என கடலுணவு விற்பனையாளர்கள் தெரிவத்தனர்.

கடலுணவுகளின் விலை வவுனியா மாவட்டத்தில் உயாந்துள்ளதாக பொது மக்கள் தெரிவித்ததையடுத்து கடலுணவு விற்பனையாளர்களிடம் இது தொடர்பில் கேட்டபோதே இவ்வாறு தெரிவித்தனர்.

இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,

எரிபொருள் விலையேற்றத்தால் கடலுணவுகளுக்கு விலையேற்றம் ஏற்படவில்லை. எனினும் தற்போது மீன் பிடிபடுதல் குறைவாக காணப்படுவதன் காரணமாக சில வகை மீன்களுக்கு விலையேற்றம் ஏற்பட்டுள்ளபோதிலும் சில கடலுணவு முன்னைய விலையை விட குறைந்தே காணப்படுவதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

 

Views: 1029

கருத்துஉங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.