.
செவ்வாய்க்கிழமை, 21 ஒக்டோபர் 2014

 

மன்னாரில் ஓகன், நடன வகுப்புக்கள் ஆரம்பம்

 

(எஸ்.ஜெனி)

மன்னார் மறைமாவட்ட சமூக அருட்பணி மையத்தின் ஏற்பாட்டில் ஓகன் வகுப்புக்களும், நடன வகுப்புக்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மன்னார் பெற்றா, புனித சூசையப்பர் வீதியில் அமைந்துள்ள சமூகத் தொடர்பு அருட்பணி மையத்தில் குறித்த வகுப்புக்கள் இடம்பெற்று வருகின்றன.

குறித்த வகுப்புக்களில் சேர்ந்து கொள்ள விரும்புகின்றவர்கள் பெயர் விபரங்களை சமூகத்தொடர்பு அருட்பணி மையத்தில் பதிவு செய்யும்படி கோரப்பட்டுள்ளது.

மன்னார் பேராலயம் மற்றும் எழுத்தூர் பங்குகளைச் சேர்ந்தவர்கள் குறித்த வகுப்புக்களில் இணைந்து கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய பங்குகளைச் சேர்ந்தவர்களுக்கு விரைவில் ஒவ்வொரு பங்கிலும் இந்த வகுப்புக்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
 

Views: 891

கருத்துஉங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.