கூட்டமைப்பில் சிலர் தொடர்ந்து தவறு விட்டுக்கொண்டிருப்பதை நாம் கைகட்டி பார்த்துக்கொண்டிருக்க முடியாது: வினோ எம்.பி
18-04-2012 02:51 PM
Comments - 1       Views - 587
(எஸ்.ஜெனி)

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் பிரதிநிதிகளை இந்திய நாடாளுமன்ற தூதுக்குழுவினர் தனித்தனியாக சந்தித்தமை எமக்கு மிகுந்த ஏமாற்றத்தையும், சந்தேகங்களையும் தருகின்றது.

இலங்கை அரசாங்கத்தைப்போல் இந்திய அரசும் கூட்டமைப்பை பிளவு படுத்த முயற்சிக்கின்றதா என்ற கேல்வியும் எமது மக்கள் மத்தியில் உருவாகியுள்ளது.

இது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தவறா? ஆல்லது இந்திய அரசின் சதியா? என விளங்கிக்கொள்ள முடியவில்லை என அக்கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் இந்திய நாடாளுமன்ற குழுவுக்கும், தமிழ் கட்சிகளின் பிரதி நிதிகளுக்குமிடையில் நடைபெற்ற சந்திப்பு தொடர்பாக கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

தமிழ் மக்கள் சார்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகின்ற போது அல்லது சந்திப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்ற போது கூட்டமைப்பின் ஒற்றுமையும், பலமும் குறைவடையாது பார்த்துக்கொள்ளப்பட வேண்டும்.

கூட்டமைப்பின் பாராளுமன்ற குழு எடுக்கின்ற தீர்மானங்கள் 5 கட்சிகள் கொண்ட கூட்டமைப்பின் தலைமையில் அங்கீகாரத்துடனேயே செயற்படுத்தப்பட வேண்டும்.

கூட்டமைப்பில் சிலர் தொடர்ந்து தவறு விட்டுக்கொண்டிருப்பதை நாம் கை கட்டி தொடர்ந்தும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது' என அவர் மேலும் தெரிவித்தார்.

"கூட்டமைப்பில் சிலர் தொடர்ந்து தவறு விட்டுக்கொண்டிருப்பதை நாம் கைகட்டி பார்த்துக்கொண்டிருக்க முடியாது: வினோ எம்.பி " இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (1)
ummpa 19-04-2012 02:02 PM
நீங்கள் ஒற்றுமை இல்லை . மற்றவர்களிப்பற்றி புறம் பேசிக்கொள்கிறீர்கள். 5 கட்சி ஒன்றாக முடிவெடுக்க முடியவில்லை அப்போது இலங்கை அரசு எப்படி முடிவெடுக்கும். புரிகிறதா சாமி . அதுக்குதான் விட்டுகொடுத்து சாதிக்கப்பழகுங்கள். " இந்தியாவின் நிகழ்ச்சி நிரல் வேறு அதனை நன்றாக புரிந்து கொள்ளுங்கள்".
Reply .
0
0
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty