வெள்ளிக்கிழமை, 18 மே 2012

பஸ் சேவை வழங்குமாறு மீள் குடியேறிய மக்கள் கோரிக்கை

(ரி.விவேகராசா)

வவுனியா மாவட்டத்தில் சேமமடு கிராமத்தில் மக்கள் மீளக்குடியேறிய போதிலும் போக்குவரத்து வசதியின்றி தாம் பெரும் சிரமத்தை எதிர்நோக்குவதாக பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளனர்.

அவசரமாக வவுனியாவிற்கும் சேமமடுவிற்குமிடையிலான  இ.போ.ச. பஸ்சேவையினை ஆரம்பிக்க வேண்டியதன் அவசியம் குறித்து மாவட்ட அரச அதிபருடைய கவனத்திற்கு கிராம வாசிகள் கொண்டுவந்துள்ளனர்.

தற்போது தனியார் பஸ் சேவை இடம்பெற்ற போதிலும் அவை திருப்திகரமானதாக இல்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Views: 383

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.