வெள்ளிக்கிழமை, 18 மே 2012

காத்தான்குடி உப தபாலக கட்டிடம் திறப்பு

 

(எம்.சுக்ரி)

புதிய காத்தான்குடி உப தபாலக கட்டிடம் இன்று வியாழக்கிழமை பிரதியமைச்சர் எம்.எல்.எ.எம். ஹிஸ்புல்லாஹ்வினால் திறந்துவைக்கப்பட்டது.

இந்த உப தபால கட்டிடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதி தபால் மா அதிபர் கே.கணகசுந்தரம், மட்டக்களப்பு மாவட்ட தபால் அத்தியட்சகர் எம்.புவனசுந்தரம், காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர் உள்ளிட்ட பலர்  கலந்துகொண்டனர்.

1999ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு கட்டப்பட்ட இத்தபாலக கட்டிடம் கடந்த 12 வருடங்களுக்கு பின்பு இன்று திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Views: 251

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.