வெள்ளிக்கிழமை, 18 மே 2012

சுதந்திரதினத்தையொட்டி மட்டக்களப்பில் 21 கைதிகள் விடுதலை

 

(எம்.சுக்ரி)

இலங்கையின் 64ஆவது சுதந்திரதினத்தையொட்டி மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து 21 கைதிகள் இன்று சனிக்கிழமை விடுதலை செய்யப்பட்டனர்.

சிறுகுற்றங்கள் இழைத்தவர்களும் சிறுகுற்றங்கள் இழைத்த நிலையில் அபராதம் செலுத்த தவறிய கைதிகளுமே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டனர்.

மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதம அத்தியட்சகர் ஏ.கித்சிறி பண்டார, மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதம ஜெயிலர் எஸ்.கஜநாயக்க, சிறைச்சாலை பிரதான நலன்புரி அதிகாரி எஸ்சிறினிவாசன், நலன்புரி அதிகாரி ஏ.முபாறக் உள்ளிட்டோர் முன்னிலையில் இக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

இதேவேளை, மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள 57 கைதிகளுக்கு  சவர்க்காரம் மற்றும் சுகாதார தேவைகளுக்கான சில பொருட்களும் வழங்கிவைக்கப்பட்டன.  கடந்த ஒரு வருடமாக உறவினர்கள் எவரும் பார்வையிட  கைதிகளுக்கே இந்த அன்பளிப்பு பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.

Views: 151

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.