.jpg)
(எம்.சுக்ரி)
காத்தான்குடியில் முபீன் நிலையத்தின் ஏற்பாட்டில் சுய தொழில் மேற்கொள்ளும் குடும்பங்களுக்கான வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை அந் நாசர் வித்தியாலயத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், பிரதியமைச்சர் பசீர் சேகுதாவூத் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான யு.எல்.எம்.என்.முபீன், எம்.ஜெமீல், எ.இஸ்மாயில் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் என்.கே.றம்ழான், காத்தான்குடி நகர சபை உறுப்பினர் சல்மா அமீர் ஹம்சா உட்பட உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் மற்றும் முக்கியஸ்த்தர்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது கிழக்கு மாகாண சபை உறுப்பினரின் நிதியொதுக்கீட்டின் கீழ் மேற்படி முபீன் நிறுவனத்தினால் 160 குடும்பங்களுக்கு இந்த வாழ்வாதார உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
.jpg)
.jpg)

