.jpg)
(ஸரீபா)
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் நேற்று இரவு வீசிய சுழல் காற்றினால் ஏழு வீடுகள், இரண்டு பொதுக் கட்டிடங்களும் சேதமடைந்துள்ளதாக வாகரை பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகி தெரிவித்தார்.
புனானை கிழக்கு கிராம சேவகர் பிரிவில் கேணிநகர் கிராமத்தில் ஐந்து வீடுகளின் கூறைகள் சேதடைந்துள்ளதுடன் கிராம சேவகர் காரியாலயம் அமைந்துள்ள கிராம அபிவிருத்திச் சங்க கட்டிடம் சேத மடைந்துள்ளது.
வாலமண்கேணி பிரதேசத்தில் இரண்டு வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் கிராம அபிவிருத்திச் சங்க கட்டிடமும் சேதமடைந்துள்ளது.
சேத விபரங்களை வாகரை பிரதேச செயலக அதிகாரிகள் மதிப்பீட்டு வருகின்றனர் என்று பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகி தெரிவித்தார்.
.jpg)
.jpg)
.jpg)

