வெள்ளிக்கிழமை, 18 மே 2012

ஈரானிய வீட்டுத்திட்ட குடியிருப்பாளர்களுக்கு காணி உறுதிகள் வழங்கிவைப்பு

 

(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள காங்கேயனோடை பிரதேசத்தில் ஈரான் நாட்டு உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட ஈரானிய வீட்டுத்திட்டத்தில் குடியிருப்பவர்களுக்கான காணி உறுதிப்பத்திரங்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை வழங்கி வைக்கப்பட்டன.

இந்த வீட்டுத்திட்டத்தில் குடியிருக்கும் 74 பேரில் 24 பேருக்கான காணி உறுதிப்பத்திரங்களை சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா  வழங்கி வைத்தார்.

இந்த வீட்டுத்திட்டம் இலங்கையிலுள்ள ஈரானியத் தூதுவரின் பெயரில் இருந்தது. தற்போது உரியவர்களின் பெயர்களுக்கு இக்காணி உறுதிகள் எழுதப்பட்டு வழங்கப்பட்டுள்ளன.

Views: 145

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.