.jpg)
(எம்.சுக்ரி)
புதிய காத்தான்குடியிலுள்ள தோணாகால்வாயை மூன்று கிராம உத்தியோகத்தர் பிரிவுகளைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சமுர்த்தி பயணாளிகள் இணைந்து நேற்று துப்புரவு செய்யும் பணியில் ஈடுப்பட்டனர்.
இந்த தோணாக் கால்வாயில் டெங்கு நுளம்பு பெருகுவதால் கால்வாயை சுற்றியுள்ள குடும்பங்கள் டெங்கு அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் நிலையை எதிர்கொண்டுள்ளதாக காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிதீன் தெரிவித்தார்.
காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் மற்றும் காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர் ஆகியோரது ஆலோசனையில் பொதுச் சுகாதார பரிசோதகர்களின் மேற்பார்வையுடன் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
புதிய காத்தான்குடி கிழக்கு மற்றும் காத்தான்குடி ஆறாம் குறிச்சி கிராம உத்தியோகத்தர் பிரிவிவுகளிலுள்ள பெண்கள் துப்பர செய்யும் பணியயை மேற்கொண்டு வருகின்றனர்.
புதிய காத்தான்குடி தோணாக் கால்வாயில் குப்பைகள் மற்றும் கழிவுகள் காணப்படுவதால் இங்கு டெங்கு நுளம்பு பெருகிவருவதாக பொதுச்சுகாதார பரிசோதகர் எம்.பசீர் தெரிவித்தார்.
.jpg)
.jpg)
.jpg)

